இன்றைய விலைவாசி உயர்வால் சாதாரண, நடுத்தர மக்கள் செலவைச் சமாளிக்க சிரமப்படுகின்றனர். சிலருக்கு பணமிருக்கும். ஆனால், தடங்கல் வரும். இப்படிப்பட்டவர்கள் செல்வ விருத்திக்காக தமிழ் மாதத்தின் துவக்கநாள் அல்லது ஏகாதசி திதியன்று மாலை நேரத்தில் அனுஷ்டிக்க வேண்டியது சத்தியநாராயண விரதம்.
இந்த விரதம் அனுஷ்டிப்பதற்கு உறவினர்கள், அண்டை வீட்டாரை விரதத்தில் பங்கேற்க அழைக்க வேண்டும். விரதத்தன்று நீராடியிருந்தாலும், மாலையில் ஒரு முறை குளித்துவிட்டு, பூஜை அறையை மெழுகி, தாமரை மலர் கோலமிட வேண்டும். வீட்டுக்கு வருவோருக்கு பூஜை முடிந்ததும் அன்னதானம் செய்யும் வகையில் சமைக்க வேண்டும். பிரதோஷ வேளையில் (மாலை 4.30-6 மணிக்குள்) பூஜை துவங்கி முடித்து விட வேண்டும். தாமரைக் கோலத்தின் மீது, ஒரு பலகையிட்டு, அதில் நூல் சுற்றிய கும்பம் வைக்க வேண்டும். அதற்கு வஸ்திரம் (சிறிய துண்டு) கட்டி, நிறைகுடத்தில் இருந்து நீர் நிரப்பி, அதன் மேல் மலர்கள் தூவ வேண்டும். சத்திய
நாராயணர் படம் ஒன்றை கும்பத்தின் அருகில் வைக்க வேண்டும். படத்தின் முன் கோதுமை மாவுடன், வாழைப்பழம், நெய், பால், தேன் கலந்து செய்த அப்பத்தை நைவேத்யமாக படைக்க வேண்டும். மனதில் விநாயகர், துர்க்கை, வருண பகவான், நவக்கிரகங்களை நினைத்து வணங்க வேண்டும்.
சத்தியநாராயணருக்கும், கும்பத்திற்கும் சாம்பிராணி, கற்பூரம் காட்டி விஷ்ணு சகஸ்ரநாமம் அல்லது 108 போற்றி , நாராயணனைக் குறித்த பாடல்கள் தெரிந்தால் பாடலாம். பூஜை முடிந்ததும், அன்னதானம் செய்ய வேண்டும்.
காசிநகரில் வசித்த அந்தணர் ஒருவர் ஏழ்மையால் சிரமப்பட்டார். பெருமாள்,
கிழ வேடம் பூண்டு அவரிடம், ""ஏன் கவலைப்படுகிறீர்! சத்திய நாராயணர் என்ற பெயர் உள்ளவர் ஸ்ரீமன் நாராயணன். சத்தியநாராயண விரதம் இருந்தால் நீர் செல்வந்தர் ஆவீர்,'' என்று சொல்லிவிட்டு @பானார். அந்தணரிடம், விரதப்பொருட்கள் வாங்க பணம் ஏது! அவர் அந்த விரதத்தைப் பற்றி சிந்தித்தபடியே "நாராயணா' என புலம்பிக் கொண்டிருந்தார். மறுநாள் யாரோ ஒருவர் அவருக்கு தானமாக சில பொருட்களைக் கொடுத்தார். அதில் விரதத்துக்கு தேவையான பொருட்களும் இருந்தன. மகிழ்ந்த அவர் விரதமிருந்தார். அன்றுமுதல்
அவரது குடும்பத்துக்கு தேவையான பொருட்கள் கிடைக்குமளவு அவரைத் தேடி பணிகள் வந்தன. மாதம்தோறும் தொடர்ந்து விரதமிருந்த அவர், ஒரு கட்டத்தில் பெரிய பணக்காரராகி விட்டார். வணிகர் ஒருவருக்கு இந்த விரதத்தின் பலனாக ஒரு மகள் பிறந்தாள். கலாவதி என பெயரிட்டார். அவளை காஞ்சிபுரத்திலுள்ள ஒருவனுக்கு மணமுடித்து வைத்தனர். பிறகு விரதம் இருப்பதையே வணிகர் குடும்பம் மறந்து விட்டது. ஒரு சமயம் அவரும் அவரது மருமகனும் ஒரு ஊரில் வியாபாரத்துக்காக சென்றனர். அப்போது, அரண்மனையில்லுள்ள பொருட்களைத் திருடிக்கொண்டு காவலர்களால் விரட்டப்பட்ட திருடர்கள் சிலர் ஓடிவந்தனர். அவர்கள் பயத்தில், திருடிய பொருட்களை இவர்கள் முன்னால் போட்டுவிட்டு ஓடிவிட்டனர். காவலர்கள் அவர்களைத் திருடர்கள் என நினைத்து சிறையிலிட்டனர்.
வணிகர் மனைவியும், கலாவதியும் வறுமையில் வாடினர். அப்போது தான் சத்தியநாராயண
விரதத்தை நிறுத்திவிட்டது வணிகரின் மனைவிக்கு நினைவு வந்தது. மீண்டும் அவள் விரதமிருந்தாள். பகவானே மன்னர் கனவில் தோன்றி வணிகரையும், அவரது மருமகனையும் விடுதலை செய்யச் சொன்னார். அந்தளவுக்கு சக்தி வாய்ந்த விரதம் இது. நீங்களும் இதை அனுஷ்டியுங்கள். பகவானின் பேரருளால் செல்வ வளம் பெருகட்டும்.
No comments:
Post a Comment