Showing posts with label ஐந்து யக்ஞம். Show all posts
Showing posts with label ஐந்து யக்ஞம். Show all posts

Monday, October 14, 2013

ஐந்து யக்ஞம்

                                       
                                        கர்மம் என்றால் யக்ஞம் என்று பொருள். யக்ஞங்கள் ஐந்து வகை.

பித்ரு யக்ஞம்- இவ்வுலகத்தில் பிறந்ததற்கான ஊனுடலைத் தந்து உதவிய தாய்- தந்தையரை வணங்குதல்

தேவ யக்ஞம்- இந்த உடலிலே ஆன்மாவைக் குடியிருக்கச் செய்து, அதற்கு உயிர் தந்த கடவுளுக்கு நன்றி
சொல்லுதல்.

ரிஷி யக்ஞம்- நல்லறிவைப் பெற்று மனதையும் புத்தியையும் பரிசுத்தமாக வைத்துக் கொள்ள, நூல்களிலிருந்தும் பெரியோர்களிடமிருந்தும் கற்று, கேட்டு அறிந்து கொள்ளுதல்.

நர யக்ஞம்- தன்னைப்போலவே பிற மனிதர்களையும் அன்பு காட்டி நேசித்து ஆவன செய்தல்.

பூத யக்ஞம்- மனிதர்கள் மட்டுமின்றி விலங்கு, பறவைகள் போன்ற ஜீவராசிகளிடத்தும் கடவுள்தான் நிறைந்திருக்கிறார் என்பதை உணர்ந்து அன்பு காட்டுதல்.

இத்தகைய ஐந்து யக்ஞகளை எவனொருவன் தினமும் தவறாது செய்து வருகின்றானோ அவனே கர்மயோகியாவான்.