Showing posts with label கடவுளை சந்திப்பது எப்போது?. Show all posts
Showing posts with label கடவுளை சந்திப்பது எப்போது?. Show all posts

Wednesday, July 27, 2011

கடவுளை சந்திப்பது எப்போது?

                    
                             உலகில் ஒவ்வொருவருக்கும் கடமை உண்டு. அதை மறந்து, தனித்து ஒதுங்கி, தாம் மட்டுமே இறைவனை அடைய வேண்டுமென முற்படுவோர் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர்.
* இயற்கையை உணர்ந்தாலே போதும், இறைவனை உணரலாம்.
* காணிக்கையுடன் வரும்போது தான், நாம் உண்மையாகவே கடவுளைச் சந்திக்கின்றோம், தேவைகளுடன் வரும்போது அல்ல.
* உண்மையான மகிழ்ச்சி நாம் எவ்வளவு பொருள் ஈட்டுகிறோம் என்பதில் இல்லை. அந்தப் பொருளை கொண்டு எவ்வளவு தர்மம் செய்கிறோம் என்பதில் தான் இருக்கிறது.
* பொருள் கிடைத்தும் ஆசை அடங்காவிட்டால் ஆசையும் நிறைவேறாது, செயலும் நிறைவேறாது.
* பிறர் ஆறுதல் சொல்வதால் வருத்தம் தீர்வதில்லை. அவரவர் மனதை சீர்படுத்திக் கொள்வது தான் கவலை தீர்க்கும் மருந்தாக இருக்கும்.
* நாம் உலகத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு, அது நம்மை ஏமாற்றுகிறதே என்று சொல்கிறோம். சரியான முறையில் உலகத்தின் நடப்பை தெரிந்து கொண்டால் வாழ்வில் வெல்லலாம்.
- தாகூர்