"நான்' என்ற அகந்தையுடன் அனைத்து செயல்களையும் செய்கிறோம். உண்மையில் "நான்' என்பது ஒரு சிறு கருவியே. உன்னை கடவுளாக எண்ணாதே. இதை உணர்ந்து விட்டால், அகந்தை நம்மிடமிருந்து வெளியேறிவிடும்.
* ஒருவர் முக்தியடைய விரும்பினால் முதலில் நல்ல ஒரு குருவை நாடவேண்டும். இது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் உண்மை. * கடவுளும் குருவும் முக்தி அடைவதற்கான வழியை மட்டும் தான் காட்டுவார்கள். நாம் தான், அவர்கள் காட்டிய வழியில் சென்று முக்தி பெற வேண்டும்.
* நீ ஒருவருக்கு கொடுத்தால் அது உனக்கே கொடுத்துக் கொண்டதாகும். நீ ஒருவரைத் திட்டினாலோ, ஏமாற்றினாலோ உன்னையே திட்டியதும், ஏமாற்றிக் கொண்டதுமாகும். நீ பிறருக்கு தீங்கு செய்யும் போது, உனக்கே தீங்கு செய்து கொள்கிறாய். ஏனெனில் பிறர் வேறு, நீ வேறல்ல.
* உண்ணாவிரதம் என்பது ஒரு நோன்பு, அது மனதளவில் மட்டுமே இருக்க வேண்டும். உணவை மறுத்து பட்டினி இருந்தால், அது மனதைப் பாதிக்கச் செய்யும். ஆன்மிகவிரிவுக்கு சாத்வீகமான உணவு அவசியம்.
- ரமணர்
No comments:
Post a Comment