Saturday, October 15, 2011

இறைவனிடம் சரணடைந்து விடு

 "ராமா' என்ற சொல்லில் "ரா' என்ற எழுத்து ஆன்ம சொரூபத்தை குறிப்பதாகும். "மா'என்ற எழுத்து "நான்' என்ற ஆணவத்தை குறிக்கிறது. ஒருவர் "ராமா' என்று இடையறாமல் ஜெபித்துக் கொண்டே இருந்தால், "மா' என்ற எழுத்து "ரா' என்ற எழுத்தில் ஐக்கியமாகி மறைந்துவிடுகிறது.
* "சரணாகதி' என்பது வலிமை மிக்க பிரார்த்தனை. கடவுள் உனக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்வார் என்ற நம்பிக்கை இருந்தால் அவரிடம் முழுமையாக சரணடைந்துவிடு.
* இன்பம், துன்பம் இரண்டையும் கடக்கும் வரை சாதனைகளை தொடருங்கள். இறுதியில் உண்மை மட்டுமே எஞ்சி நின்று அதன் முழு பலனை தந்து விடும்.
* நான் பலவீனமானவன், தீயவன் என்று நினைப்பதுகூட மனிதன் செய்யும் பெருந்தவறாகும். உண்மையில் அவன் பலவீனனும் அல்லன்; தீயவனும் அல்லன், ஒவ்வொரு மனிதனும் தெய்வீகத்தன்மையும், வலிமையும் படைத்தவனே ஆவான். அவனது உலகியல் பழக்க வழக்கங்களும், எண்ணங்களுமே அவனை பலவீனமாக்குகின்றன.
- ரமணர்

No comments:

Post a Comment