Saturday, October 15, 2011

கடவுள் தந்த வரப்பிரசாதம்


சுயகட்டுப்பாடு, ஒழுக்கம் இவற்றையெல்லாம் தன்னுடைய சுதந்திரத்தைத் தடுக்கும் தடைகளாக மனிதன் எண்ணுகிறான். அதனால் இவற்றை வெறுக்கிறான். கட்டுப்பாடும், ஒழுக்கமும் மனிதனை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும் ஆக்கசக்திகள் என்ற உண்மையை உணருங்கள். மனிதனின் மனவளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட ஏற்பட அவனிடம் குடிகொண்டிருக்கும் அடிமட்ட எண்ணத் தூண்டுதல்கள் படிப்படியாக நீங்க ஆரம்பித்து விடும். மனத்தெளிவு உடையவனிடம் உயர்ந்த எண்ணங் கள் மட்டுமே உருவாகும்.
வாழ்க்கையில் உயர்ந்த இன்பமான அனுபவங்களைப் பெறவேண்டுமானால் நம் உள்ளத்தையும், நம்மைச் சுற்றியுள்ள புறச்சூழ்நிலையையும் செம்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் நமக்கு உண்டாகும் இடையூறுகளுக்கு விடை கொடுக்க நினைப்பவர்கள், வாழ்வில் ஏற்படும் துன்ப அனுபவங்களைச் சீர் செய்வதில் அக்கறை உடையவர்களாக இருக்க வேண்டும். பிரம்மச்சர்யம் என்னும் சுயகட்டுப்பாடு, அகிம்சை என்னும் துன்புறுத்தாமை, சத்தியம் என்னும் உண்மை இவைதான்
மனிதனுக்குரிய அடிப்படைத் தகுதிகள். இவற்றையுடைய மனிதனின் உடலும், மனமும், புத்தியும் கடவுளால் அவனுக்கு அளிக்கப்பட்ட வரப்பிரசாதமாகும்.

No comments:

Post a Comment