Sunday, October 23, 2011

குட்டுகிறோம் மன்னித்துக் கொள்


இதிகாசங்களில் ஒன்றான  மகாபாரதத்தை  வியாசர் சொல்ல  விநாயகப் பெருமானே  எழுதி அருள் செய்தார்.


"அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே' என்று இவர் முன் நின்றவுடன் தலையில் குட்டிக்கொள்வது மரபு. ஏன் இப்படி குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் இடவேண்டும் என்பதற்கு புராணக்கதை ஒன்று உள்ளது.ஒருமுறை தவமுனிவரான அகத்தியர் கமண்டலமும் கையுமாக வந்து கொண்டிருந்தார். அப்போது காக உருவெடுத்து வந்த விநாயகப் பெருமான் அக்கமண்டல நீரை தட்டி விட்டு ஓடி விட்டார். காகம் கவிழ்த்த கமண்டல நீர் ஆறாக ஓடிவந்தது. காகம் கவிழ்த்த கமண்டல நீர் ஆறாக ஓடிவந்தது. காகம் தட்டியதும் விரிந்து பரந்து ஓடியதால் "காவிரி' என்ற பெயர் அந்நதிக்கு உண்டானது. கமண்டலத்தை தட்டி விட்ட காகத்தை அகத்தியர் திரும்பிப் பார்த்தார்.அதைக்காணவில்லை. காகம் நின்ற இடத்தில் "கொழு கொழு' என்று ஒரு சிறுவன் நின்றிருந்தான். அவன் தான் தொப்பைக் கணபதி. செய்வதையும் செய்துவிட்டு முனிவரைப் பார்த்துச் சிரித்தான். கோபமடைந்த அகத்தியர் அச்சிறுவன் தான் கமண்டல நீரை கவிழ்த்தவன் என்றெண்ணி, அவனது தலையில் குட்ட முயன்றார். ஆனால், அச்சிறுவன் விநாயகப் பெருமானாக அகத்தியர் முன் நின்றான். குட்ட முயன்ற தவறுக்காக வருந்திய அகத்தியர், அப்படியே தன் தலையில் குட்டிக் கொண்டு, மன்னிக்குமாறு வேண்டினார்

No comments:

Post a Comment