Sunday, October 30, 2011

விரதம் இருப்பதால் என்ன நன்மை?



விரதம் இருப்பதன் மூலம் உடல் தூய்மை பெறும், மனம் வலிமைபெறும் இறைவனது அருள் நமக்கு கிடைக்கும். ஓயாமல் சாப்பிடுவதன் மூலம் ஓய்வெடுக்க முடியாமல் இருக்கும் நம் உடலின் ஜீரண உறுப்புகளுக்கும் அப்போது ஓய்வு கிடைக்கும். விரதத்திற்கு மறுநாள் நாம் சாப்பிடும்போது ஜீரண உறுப்புகள் சீராக இயக்கத் தொடங்கும். ஆலைகளில் பணி புரிபவர்களுக்கு வார விடுமுறை விடுவதுபோல ஆலயங்களுக்குச் சென்று அருள் பெற விரும்பும் நாம் ஆரோக்கியமாக இருக்க இந்த விரதங்கள் தேவை. விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதமும், துவாதசி விரதமும் ஆகும்

வழிபாட்டுக்கு காலை, மாலை எந்த வேளை சிறந்தது?
                                                காலை வேளையே மிகவும் சிறந்தது. உங்களைப் பார்த்து உங்கள் வாரிசுகளும் காலையிலேயே எழும் பழக்கத்தை மேற்கொள்வார்கள். காலை 5.30 மணிக்கு எழுந்து, 6 மணிக்குள் வீடு சுத்தம் செய்து, ஏழு மணிக்குள் நீராடி, 7.30 மணிக்குள் பிரார்த்தனையை முடித்து விடுங்கள். 5 நிமிடம் வணங்கினாலும், குடும்பத்தினர் அனைவரும் இணைந்து வழிபட்டால் பிரார்த்தனைக்கு சக்தி அதிகம்.

No comments:

Post a Comment