மனிதன் தானே எல்லாவற்றையும் செய்வதாக எண்ணிக் கொள்கிறான். பிரச்னையே இங்குதான் தொடங்குகிறது. நம்மையும் மீறிய ஒரு சக்தியால் நாம் இயக்கப்படுகிறோம் . நாம் அச்சக்தியின் ஒரு கருவியே என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். அதைப் புரிந்து கொண்ட பின் பல துன்பங்களிலிருந்து மனம் விடுபட்டு விடும். அந்த எண்ணம் தோன்றாதவரைக்கும் நமக்கு நாமே துன்பங்களை வரவழைத்துக் கொள்கிறோம் என்பதே உண்மை. மரணத்திற்குப் பிறகு என்ன என்பதைப் பற்றி எண்ணி இப்போதே விடை தேட வேண்டாம். எதிர்காலத்தைப் பற்றி எதிர்காலமே கவனித்துக் கொள்ளும். எனவே, அந்தக்
கவலையை விடுத்து நிகழ்காலத்தில் நிறைவாக வாழ முற்படுங்கள். ஒருவன் தன்னைப் பற்றி முதலில் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். தன்னைப் பற்றியே சரியாகவும், முறையாகவும் அறிந்து கொள்ள முடியாத ஒருவனால் உலகத்தைப் பற்றி அறிந்து கொள்வது முடியாத செயல். அப்படி அறிந்து கொண்டதாக ஒருவன் எண்ணினால், அது அஸ்திவாரம் இல்லாமலேயே சுவர் எழுப்பியது போன்றதாகும். உடுத்தும் உடையை மாற்றிக் கொள்வதும், வீட்டைத் துறப்பதும் மட்டும் சந்நியாசமன்று. மனதில் உள்ள ஆசாபாசங்களையும், பந்தங்களையும் துறப்பதே உண்மையான சந்நியாசம்.
No comments:
Post a Comment