Saturday, November 5, 2011

தடைகளை நீக்கும் பரிகாரம்

                                                       சிலருக்கு எதை எடுத்தாலும் தடை, தாமதம் என மனம் தளர்வடைந்து இருக்கும். இந்த தடை நீங்கி, நல்லவிதமாக திட்டங்கள் நிறைவேற வேண்டுமானால் விநாயகப்பெருமானை வழிபட @வண்டும். பிள்ளையார்சுழி போட்டு எதையும் தொடங்க வேண்டும் என்று முன்னோர் குறிப்பிடுகின்றனர். நம்பி வழிபடுவோருக்கு சிறு பிள்ளை போல மகிழ்ந்து வரம் கொடுப்பவர் என்பதால், இவருக்கு பிள்ளையார் என்று பெயர். இவரை விட மேலான தலைவர் வேறு யாரும் இல்லை என்பதால் விநாயகர் என்று சிறப்பிக்கப்படுகிறார். திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்ற பழமொழியும் இவரையே குறிப்பிடும். வீட்டிலும், ரோட்டிலும் என எந்த இடத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவர் இவர் மட்டுமே. அவ்வையார் அருளிய விநாயகர் அகவல் அற்புதமான மந்திரநூல். இதில் சைவசித்தாந்தத்தை சாறாகப் பிழிந்து நமக்காக கொடுத்திருக்கிறாள். இதைத் தொடர்ந்து 48நாட்கள் படித்து வந்தால் தடைகள் பறந்தோடி விடும். இதுதவிர, கபிலமுனிவரின் காரியசித்திமாலை என்ற விநாயகர் துதியையும் படிக்கலாம். இதையும் விட எளிமையான பரிகாரம் ஒன்று உள்ளது. ஓம் ஸ்ரீ கணேசாய நம ஓம் சக்திவிநாயகநம என்ற மந்திரங்களில் ஏதாவது ஒன்றை தினமும் 108 முறை, காலையில் சொல்லிவிட்டு பணிகளைத் துவக்குங்கள். வளர்பிறை, தேய்பிறை சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல் மாலையிட்டு 12 முறை வலம் வாருங்கள். தடைகளை நொறுக்கி முன்னேறுவீர்கள். பெருமாளின் திருநாமமான கேசவா என்று ஏழுமுறை சொல்லிவிட்டு வெளியில் கிளம்பினாலும், தடையின்றி செயல்கள் நடக்கும்.

No comments:

Post a Comment