கைலாயத்தில் உள்ள சோலையில் ஒரு வில்வ மரத்தடியில் சிவன் பார்வதி தேவிக்கு சிவாகமங்களை உபதேசித்து கொண்டிருந்தார்.வி� ��்வ மரத்திலிருந்த கருங்குரங்கு விளையாட்டாக வில்வ இலைகளை பறித்து சிவன் மீதும், பார்வதி மீதும் பாதம் முதல் தலை வரை போட்டது. குரங்கின் இந்த செயலால் கோபத்துடன் மேலே பார்த்தார் பார்வதி. உடனே குரங்கிற்கு அஞ்ஞானம் விலகி மெய்ஞானம் வரப்பெற்றது. உடனே குரங்கு மரத்திலிருந்து கீழே இறங்கி அம்மையப்பனின் பாதத்தில் விழுந்து அடியேன் செய்த பிழையை பொறுத்தருள்க என வேண்டியது.
அதற்கு சிவன், "குரங்கே நீ கவலைப்பட வேண்டாம். ஒரு வில்வ இலையால் எம்மை அர்ச்சித்தாலே எல்லா நலன்களும் கிடைக்கும். ஆனால் நீ தெரிந்தோ தெரியாமலோ வில்வ இலைகளைப்பறித்து எம்மீது போட்டுள்ளாய். ஆகவே நீ மண்ணுலகில் அரிச்சந்திர குலத்தில் அரசனாகப்பிறந்து சிறந்த செல்வ நலன்களை அனுபவித்து பின் கயிலை வந்து சேர்வாயாக" என அருள்புரிந்தார்.
அதற்கு சிவன், "குரங்கே நீ கவலைப்பட வேண்டாம். ஒரு வில்வ இலையால் எம்மை அர்ச்சித்தாலே எல்லா நலன்களும் கிடைக்கும். ஆனால் நீ தெரிந்தோ தெரியாமலோ வில்வ இலைகளைப்பறித்து எம்மீது போட்டுள்ளாய். ஆகவே நீ மண்ணுலகில் அரிச்சந்திர குலத்தில் அரசனாகப்பிறந்து சிறந்த செல்வ நலன்களை அனுபவித்து பின் கயிலை வந்து சேர்வாயாக" என அருள்புரிந்தார்.
கை கூப்பி வணங்குவது ஏன்?
பாரத நாட்டில் பல்வேறு மொழி, இனம் இருந்தாலும் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கைகுவித்து வணங்குகின்றனர்.
கோயில்களில் ஆண், பெண் வணங்கும் முறையில் வேறுபாடுகள் உண்டு. பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் செய்வர். இல்லையெனில் இரு கைகளையும் குவித்து வணங்குவர். ஆண்கள் தலைமேல் கைகுவித்து வணங்கும் பழக்கம் நம் நாட்டில் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள பழக்கம்.
உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களும் பஞ்ச பூதங்களின் கலப்பால் ஆனது. அளவுகள் வேறுபடலாம். அதை பஞ்சகோசங்கள் என்று கூறுவர். 5 விரல்கள் 5 கோசங்களை காட்டுகிறது. மனிதன் உருவாக காரணமாக உள்ள 5 கோசங்களாக அன்னமய கோசம், மனோமய கோசம், பிராணமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என்பன.
மனித உடல் அன்னத்தால் ஆனது. இதை குறிப்பது அன்னமய கோசம். எனவேதான் "உண்டிதற்றே உணவின் பிண்டம்" என்பார்கள். உண்ணும் உணவு மனிதனின் உடம்பை மட்டுமல்ல நம் சிந்தனையையும் நிச்சயிக்கிறது.
காற்றை சுவாசிப்பதால் உடம்பு வளர்கிறது. இது பிராணமய கோசம். அதை எப்படி சுவாசிப்பது அதனால் எந்த வகையான ஆற்றலை பெறுவது என யோக நூல்கள் சொல்கின்றன.
மூன்றாவது மனோமய கோசம். மன எண்ணங்களால் உருவாவது. தர்மசாஸ்திரம் 'மனநலனுக்கு' முக்கியத்துவம் தருகிறது. மனிதன் எதுவாக நினைக்கிறானோ அதுவாகிறான் என்கிறது நூல்கள். விஞ்ஞானமும் இதைதான் கூறுகிறது.
புத்தியால் அமைவது விஞ்ஞானமயகோசம். எண்ணில்லாத சிந்தனைகளுக்கு வடிவம் கொடுப்பதே புத்தியாகும்.
இந்த கோசங்களால் மனிதன் பெறும் மாறாத மகிழ்ச்சி - நிலைத்த இன்பம் ஆனந்தமயகோசம் ஆகும்.
மனிதனுக்கு மனிதன் 5 கோசங்களில் மாறுபடலாம். ஆனால் எல்லோரிடமும் உள்ளது 'ஆத்மா' என்ற ஒன்றுதான் என்பதைதான் கைகுவித்து உணர்த்துகிறார்கள�� �. ஒரு கை தன் 5 கோசங்கள்; மற்றொரு கை அடுத்தவரது 5 கோசங்கள் இரண்டையும் இணைப்பது ஆத்மா ஒன்றே என்று காட்டுகிறது. இறைவன் முன்னிலையில் இந்த உண்மையை பக்திப்பூர்வமாக ஒப்புக்கொண்டு உணர்ந்து செயல்படுவேன் என்று உணர்த்தவே கைகுவித்து வணங்குகிறார்கள்.
கைகுளுக்கிக் கொள்ளும் இந்த காலத்தில், இனி நம்மவருள் எவரையேனும் சந்திக்க நேரிடில், கைக்குவித்து வணங்குவது நமது பண்பாட்டின் வெளிப்பாடு. தமிழ் கலாச்சரத்தின் பெருமை.
No comments:
Post a Comment