காக்கும் கடவுளான விஷ்ணு பகவானுக்கு நடத்தப்படும் பூஜையே சத்யநாராயண பூஜையாகும். பெருமாள் எடுத்த பலவிதமான அவதாரங்களில் சத்யநாராயணர் அவதாரமும் ஒன்று. இந்த சத்யநாராயணருக்கு நடத்தப்படும் பூஜை மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. இப்பூஜை திருமணம், முக்கிய திருவிழாக்கள், வீடு, நிலம் வாங்கும் போது என எந்த ஒரு நல்லகாரியத்தின் போதும் நடத்தப்படுகிறது. பக்தர்கள் சத்யநாராயண பூஜையை பவுர்ணமியன்று நடத்துகிறார்கள். எந்த ஒரு காரியத்திலும் வெற்றி கிடைக்க வேண்டும் என்று மனதில் பிரார்த்தித்துக் கொண்டு இந்த பூஜையை செய்ய வேண்டும்.
முழுமுதற் கடவுளான விநாயக பெருமானை வணங்கி இந்த சத்யநாராயண பூஜையை ஆரம்பிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து நவக்கிரக பூஜை, மற்ற சில பூஜைகøயும் செய்ய வேண்டும். பின் விஷ்ணுவின் பல்வேறு நாமங்கள் கொண்டு அர்ச்சனை செய்யப்படும். பூஜை முடிந்த பிறகு வகை வகையான உணவுகள் பிரசாதமாக நிவேதிக்கப்படும். இப்பூஜையின் போது சத்யநாராயணரின் வரலாற்றை விவரிக்கும் கதையை, பூஜை செய்பவர்கள் அல்லது வயதான பெரியவர்கள் யாராவது கூறவேண்டும்.
பவுர்ணமி மற்றும் மகர சங்கராந்தி (பொங்கல்) அன்று இப்பூஜையை நடத்த மிக உகந்த நாட்கள். பொதுவாக, சத்யநாராயண பூஜை கோயில்களிலோ அல்லது வீட்டிலிலே நடத்துவார்கள். கோயிலில் நடத்தும் போது பக்தர்கள் கோயில் குருக்களின் உதவியோடு இப்பூஜையை நடத்துகிறார்கள்.
No comments:
Post a Comment