Sunday, March 11, 2012

எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே நம்மை ஆளும்

                  
             இறைவனிடம் நாம் கொள்ளும் பக்தியும், அதை முறைப்படி செலுத்துவதற்காக மேற்கொள்ளும் விரதங்களும் தான், நம்மைத் தூய்மைப்படுத்துகின்றன.
* மனிதனின் மனதுக்குள் படிந்துவிட்ட தீய எண்ணங்களையும் ஆசையையும் அகற்றி, அதில் இறைத்தன்மையை மலரச் செய்வது தான் புனித நூல்களின் குறிக்கோள்.
* தளர்ச்சி, சோர்வு போன்ற அனைத்து தடைகளையும் ஆன்மிக உணர்வு நீக்கி விடும். ஒரு மனிதனின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருப்பதுவும் அதுவே.
* இறைவனைப்பற்றி விளக்குவது இயலாத செயல் மட்டுமல்ல, அது அவரை மாசுபடுத்துவதையும் போலாகிவிடும். அவன் அறிவினால் அறியப்படும் பொருள் அல்ல. அனைவரிடத்திலும் இருக்கின்றஉயிர்த் தத்துவம்.
* ஒரு மனிதன், தன் உண்மையான இயல்பை தெரிந்து கொண்டு, தனக்குரிய பூரண வளர்ச்சியை அடைய துணை செய்யும் சாதனமே தியானம்.
* நமது எண்ணங்கள், சொற்கள், செயல்பாடுகள் ஆகியவை எந்தளவுக்கு துல்லியமாக இருக்க வேண்டுமென விரும்புகிறோமோ, அதே போல பிறருடையனவும் அமைய வேண்டும் என்று எண்ணுவதே தெய்வீக வாழ்க்கையின் முதற்படி.
* ஒரு செயலைச் செய்யும் போது, உடல், உழைப்பு ஆகியவை மட்டும் சம்பந்தப்பட்டிருந்தால் போதாது. மூளையும் மனமும் ஈடுபட்டிருக்க வேண்டும்.
* செவிகொடுத்துக் கேட்டால், இறைவன் உங்கள் விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் அச்சத்தை வென்ற துணிவைப் பாராட்டிச் சிரிப்பது உங்கள் காதில் ஒலிக்கும்.
குளிர்காலத்தில் மனதைத் தண்டிக்க ஒரே வழி, அதிகாலையில் குளிர்ந்த தண்ணீரில் குளிப்பதேயாகும்.
* தன்மீது நம்பிக்கை வைக்கும் அளவுக்கு திடத்தையும், துணிவையும் பெற்றவன், வாழ்வில் பெரும் மேடு பள்ளங்களைக் கடந்து, தெய்வீக வாழ்க்கை என்ற கோட்டையைக் கைப்பற்றுவான்.
* இதயம் என்ற ஒன்று இருந்தால்,அது அன்பால் மட்டுமே நிரப்பப்பட்டிருக்க வேண்டும். யாருடைய மனதில் அன்பு ஆட்சி செய்கிறதோ, அந்த மனிதன் தெய்வீக நிலையை அடைகிறான்.
* இறைவன் நம் மனமாகிய வீட்டில் இருந்து இயங்குகிறான். அவன் நமக்குத் தெரியாவிட்டாலும், அவனது அருள் நமது வாழ்க்கையில் பல்வேறு பலன்களைத் தருகிறது.
* விளக்கை எடுத்து வந்தால் இருள் தானாகவே விலகிவிடும். அதேபோல் நல்ல எண்ணங்களுக்கு முக்கியத்துவம் அளித்தால், தீயவை தானாகவே ஓடிப்போய்விடும்.
* இறைவன் எந்தளவு செல்வத்தை கொடுக்கிறாரோ, அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு, நல்லவராய் வாழ்ந்து நன்மைகளைப் பெற வேண்டும்.
* நீரின் ஓட்டமே ஆறு என்பது போல், எண்ணங்களின் ஓட்டமே மனம் என்று வரையறுக்கப் பட்டுள்ளது.
* மனம், புத்தி இவற்றின் குணத்தையும் தரத்தையும் பொறுத்து, மனிதத்தன்மை தீர்மானிக்கப் படுகிறது.
* மனதை தூய்மைப்படுத்தியும், புத்தியை வளப்படுத்தியும் மனிதனுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தும் பணியைச் செய்வதே மதம்.
* வாழ்க்கையின் இடையூறுகளுக்கு விடை, நம்முடைய அனுபவங்களை சீர் செய்வதில் இருக்கிறது.

No comments:

Post a Comment