மகாபாரதத்தில் விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரம் இடம்பெற்றுள்ளது. இது பீஷ்மர் தர்மபுத்திரருக்கு உபதேசித்ததாகும். 150 ஸ்லோகங்களைக் கொண்ட இதில் விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்கள் கூறப்பட்டுள்ளன. சிவன், ராமன், கிருஷ்ணர், லலிதாசகஸ்ர நாமங்கள் பல தெய்வங்களுக்கும் இருந்தாலும் விஷ்ணு சகஸ்ரநாமமே புகழ்பெற்றதாக விளங்குகிறது. இந்நூலுக்கு ஆதிசங்கரர், பராசரபட்டர், ராகவேந்திரர் மூவரும் அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் ஆகிய மூன்று தத்துவங்களிலும் உரை எழுதியுள்ளனர். போருக்கு முன் கிருஷ்ணர் கீதையை அர்ஜுனனுக்கு உபதேசித்தார். போர் முடிந்த பிறகு தர்மருக்கு பீஷ்மர் சகஸ்ரநாமத்தை உபதேசிக்கிறார். அப்போது கிருஷ்ணரும் இந்த நாமத்தைக் கேட்டு மகிழ்கிறார். பகவானைக் காட்டிலும் அவருடைய திருநாமத்திற்கு மகத்துவம் அதிகம். ஏதாவது பலன் கருதி விஷ்ணுசகஸ்ர நாமத்தைப் பாராயணம் செய்பவர்கள் ஒரு மண்டலம் செய்வர். அரைமண்டலமாக 24நாட்களும், கால்மண்டலமாக 12 நாட்களும் பாராயணம் செய்யலாம். விஷ்ணுசகஸ்ரநாமம் பாராயணம் செய்தால் நோய்கள் நீங்கி உடல் பலம் பெறும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. துன்பத்திற்கு காரணமான முன்வினைப் பாவத்தைப் போக்குவதில் விஷ்ணுசகஸ்ரநாமம் ஈடுஇணையற்றதாகக் கருதப்படுகிறது.
Without devotion, knowledge is tasteless. Without knowledge, devotion is mere empty idol worship- SWAMI CHINMAYANANDA
Monday, March 19, 2012
நோய் தீர்க்கும் ஸ்தோத்திரம்
மகாபாரதத்தில் விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரம் இடம்பெற்றுள்ளது. இது பீஷ்மர் தர்மபுத்திரருக்கு உபதேசித்ததாகும். 150 ஸ்லோகங்களைக் கொண்ட இதில் விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்கள் கூறப்பட்டுள்ளன. சிவன், ராமன், கிருஷ்ணர், லலிதாசகஸ்ர நாமங்கள் பல தெய்வங்களுக்கும் இருந்தாலும் விஷ்ணு சகஸ்ரநாமமே புகழ்பெற்றதாக விளங்குகிறது. இந்நூலுக்கு ஆதிசங்கரர், பராசரபட்டர், ராகவேந்திரர் மூவரும் அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் ஆகிய மூன்று தத்துவங்களிலும் உரை எழுதியுள்ளனர். போருக்கு முன் கிருஷ்ணர் கீதையை அர்ஜுனனுக்கு உபதேசித்தார். போர் முடிந்த பிறகு தர்மருக்கு பீஷ்மர் சகஸ்ரநாமத்தை உபதேசிக்கிறார். அப்போது கிருஷ்ணரும் இந்த நாமத்தைக் கேட்டு மகிழ்கிறார். பகவானைக் காட்டிலும் அவருடைய திருநாமத்திற்கு மகத்துவம் அதிகம். ஏதாவது பலன் கருதி விஷ்ணுசகஸ்ர நாமத்தைப் பாராயணம் செய்பவர்கள் ஒரு மண்டலம் செய்வர். அரைமண்டலமாக 24நாட்களும், கால்மண்டலமாக 12 நாட்களும் பாராயணம் செய்யலாம். விஷ்ணுசகஸ்ரநாமம் பாராயணம் செய்தால் நோய்கள் நீங்கி உடல் பலம் பெறும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. துன்பத்திற்கு காரணமான முன்வினைப் பாவத்தைப் போக்குவதில் விஷ்ணுசகஸ்ரநாமம் ஈடுஇணையற்றதாகக் கருதப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment