சில வீடுகளில், குழந்தைகள் யார் பேசுவதையோ கேட்டு, தப்பு தப்பாக பேசுவார்கள். குறிப்பாக, பலர் முன்னிலையில் அவ்வாறு பேசும் போது, பெற்றவர்களுக்கு தலை குனிவாக இருக்கும். இத்தகையவர்கள் சிறிய பரிகாரம் ஒன்றைச் செய்யலாம்.
சிறிய அளவிலான ஆண்டாள் சிலையோ, படமோ வைத்து வழிபட்டால், வீட்டிலுள்ள குழந்தைகள் நல்லதைப் பேசுவார்கள் என்பது காலம் காலமான நம்பிக்கை. இதற்கு காரணம் உண்டு. தெய்வங்கள் சிலை வடிவில் இருப்பதை "அர்ச்சாவதாரம்' என்பர். சிலையை "ஒரு படி தண்ணீர்' என கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த தண்ணீரில் தெய்வத்தை எழுந்தருளச் செய்தால் அது ஆயிரம் படிபால் கலந்ததற்கு ஒப்பாகும். அதிலும், கோதை ஆண்டாளை எழுந்தருளச் செய்தால், நம் வீட்டுப் பிள்ளைகள் நல்லதையே பேசுவார்கள். நல்லதைப் பேசுபவன் நல்லதையே சிந்திப்பான். அவள் அழகாய் பேசுவாள் என்பதற்கு திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகியவை உதாரணம். "மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால்' என்று துவங்கி, வங்கக்கடல்கடைந்த மாதவனை' என்றுமுடிக்கும் வரை இனிமையான சொற்களை மட்டுமே அவள் பயன்படுத்துகிறாள். ""வாரணமாயிரம் சூழ வலம் வந்து நாரணன் நம்பி' என்று பாடும் பாடல், இன்று எல்லா வீடுகளிலும், எல்லார் வாயிலும் ஒலிக்கிறதென்றால், அதன் மென்மையே காரணம். தினமும் ஆண்டாள் பாடல்கள் ஒலிக்கும் வீட்டுப் பிள்ளைகள்
நல்லதையே பேசுவார்கள்.
No comments:
Post a Comment