Saturday, March 10, 2012

ஓம் நமே பகவதே ராமகிருஷ்ணாய



தம் வாழ்க்கையாலும் உபதேசங்களாலும் எல்லா மதங்களிலும் உள்ள ஒற்றுமையை எடுத்து விளக்கி, ஸர்வ சமய ஸமரஸத்தைப் பரவச் செய்த பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு நமஸ்காரம் !
1. பக்தி
எவருக்குப் பகவானிடம் பக்தி உள்ளதோ அவர்களே மேன்மையானவர்கள். அது ஒன்றே இவ்வுலகில் உண்மையானது ; மற்ற விஷயங்கள் யாவும் மித்தையே. புனிதமான, புண்ணிய வாழ்க்கையைக்கொள். பயமற்றுத் தைரியமாயிரு. உன் முன்னால் ஆயிரம் மாந்தர் தவறி விழுந்தாலும் கவனியாதே; அப்பொழுதும் உறுதியுடன் நில்; கைவிட்டு விடாதே. பக்தியும் அன்பும் பெற்றிருப்பது உண்மையிலேயே எவ்வளவு மேன்மையான விஷயம்! பக்தி ஒன்றேதான் மனிதனை இன்பமடையச் செய்யக்கூடியது.
உண்மையான பக்திக்கு அபூர்வமான சக்தியுண்டு. அதன் மூலம் ஒரு பக்தன் ஒரு கல்லினின்றுங்கூட தெய்வீக சக்தியை எழுப்பலாம். பக்தி என்பது உயிருள்ளதொரு சக்தி ; உயிரற்ற சரீரத்திற்கு அது உயிரளிக்கவும் கூடும். பகவானிடம் இயற்கையிலே இம்மாதிரி அன்பைப் பெற்றவர் ஆனந்தத்தையடைந்தவராவர். ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொல்வதைக்கேள் - பக்தி, நம்பிக்கை ஆகிய இவைகளின் மூலம் நம்முடைய இலட்சியத்தைச் சுலபமாக அடையலாமேயொழிய, தர்க்கம் புரிவதால் எந்நாளும் அதை அடைய முடியாது.
உண்மைப் பக்திதான் கடவுள் தரிசனத்தை நமக்குக் கிட்டச் செய்கிறது. கேவலம் புத்தியினால் எவரும் அவனை அடைய முடியாது. யோகாப்பியாசத்தினாலும், பலவிதமான கஷ்டானுபவங்களாலுங்கூட அவனை அடைய முடியாது. இது பகவானுடைய வாக்கியமாகும். பரிசுத்த மெய்யன்பினாலும் ஒருமுகமான தன்னமற்ற அன்பினாலுமே அவனையடைதல் கூடும். கடவுள் பந்தமில்லாதவர். அவர் எந்த விதியினாலும் கட்டுண்டிருக்கவில்லை. அங்ஙன மிருந்தும் அவர் "என் பக்தர்களால் நான் கட்டுண்டிருக்கிறேன் எனக் கூறுகிறார். ஒரு பெரிய அவதார புருஷர் கூறியதைப்போல் "கடவுளே அன்பு ; அன்பே கடவுள். ஆனால் இதை யதார்த்தமாய் அறிவது மிகக் கடினம். தூய்மையான ஹிருதயத்தைப் பெற்றவனே இதையறிந்து உணர முடியும். சிறிதளவு சுயநல ஆசை இருப்பினும் இதைப்பெற நாம் எதிர்பார்ப்பது வீணே. அது புனிதமான வஸ்து ; தெய்வீகமானது.
இத்தகைய அன்பு ஜனித்ததும், மனிதன் இகலோகக் கட்டுகளிலிருந்து விடுபட்டவனாகிறேன். ஆனால் அது கடினாமாயிருக்கிறதேயென்று நாம் மனந்தளரக் கூடாது. <உலகின் மத்தியிலிருந்து நோக்கும்பொழுது அது எவ்வளவு கடினமாகத் தோன்றினும், அதை நாம் அனுபவித்தறிந்தேயாக வேண்டும். அதைப் பெறாதாயின் ஹிருதயம் வெறும் கட்டாந்தரையேயாகும். இதுவே நமது வாழ்க்கை ; இவ்வுலகில் இது ஒன்றே ஸத்யமானது. யதார்த்தமான உண்மைப் பக்தனுக்கு இது கடினமானதல்ல. அன்பினாலேயே அமைக்கப்பட்ட அவன் ஹிருதயம் தானாகவே ஈசுவரனை நோக்கிப் பாய்ந்து ஓடுகிறது.
கடவுளிடம் பூரண நம்பிக்கையுடையவனாக இரு; எல்லாக் கவலைகளிலிருந்தும் நீ விடுபட்டவனாவாய். அவர் உன்னை ஆசீர்வதித்து, எல்லாத் தீங்குகளிலிருந்தும் ரக்ஷிப்பார். உன் கண்களை அவர் மீதே அசையாது செலுத்தி, குழந்தையைப் போல் களங்கமற்ற தன்மையுடன் அவரைப்பிரார்த்திப்பாயாக. எதையும் கவனியாதே. ஒருபொழுதும் தைரியமிழந்து மனந்தளராதே. எப்பொழுதும் கவலையின்றியிரு. அப்பொழுது பகவானுடைய ஆசீர்வாதத்தினால் நீ சாந்தியுடனும் ஆனந்தத்துடனும் வீற்றிருப்பாய்.நீ உண்மைப் பக்தனாக இருக்க இஷ்டப்பட்டால், உலக சம்பந்தமான எண்ணங்களிலிருந்தும், செய்கைகளிலிருந்தும் நீ விடுதலையடைய வேண்டும். உலக உபாதிகள் உன்சாந்தி நிலையை ஒருபொழுதும் கலக்கிவிடக் கூடாது. பரிசுத்தமாயும், மாசற்றும், தன்னலங் கருதாமலும், ஆழ்ந்த அன்பைக் கொண்ட விசால ஹிருதயத்துடனும் இரு. நீ உன்னை ஒரு பெரிய மனிதனாகப் பாவித்துக் கொள்ளாதே ; பரமாத்மாவினுடைய தாழ்ந்த தொண்டனாகவே உன்னை எண்ணிக் கொள்; அபாயத்தைப் பற்றிய சிந்தனையேயின்றி, சேவை புரிய எப்பொழுதும் தயாராக இரு, கடவுளை நினைத்துக் கொண்டும், தூய வாழ்க்கையை வாழ்ந்தும் கொடிய அகால மரணத்தையடைய நேரிடினும் அதுவே மேன்மையென்பதை ஞாபகத்தில் வை ; அங்ஙனமின்றி, சுகபோகங்களுடன் வாழ்வதாயினும், அது <உன்னை உனது இலட்சியத்தினின்றும் நழுவச் செய்துவிடும் ; இதை விடப் பெரியதோர் சாமில்லை. எப்பொழுதும் கவனத்துடனிரு ; ஏதோவொரு சமயம் நேரும் மனோபலக் குறைவினால் உனதனைத்தையும் நீ இழந்துவிடாதே. தைரியமாய்ப் பயமின்றி நட ; ஒரு பொழுதும் பொறுமையை இழக்காதேநீ உண்மைப் பக்தனாக இருக்க இஷ்டப்பட்டால், உலக சம்பந்தமான எண்ணங்களிலிருந்தும், செய்கைகளிலிருந்தும் நீ விடுதலையடைய வேண்டும். உலக உபாதிகள் உன்சாந்தி நிலையை ஒருபொழுதும் கலக்கிவிடக் கூடாது. பரிசுத்தமாயும், மாசற்றும், தன்னலங் கருதாமலும், ஆழ்ந்த அன்பைக் கொண்ட விசால ஹிருதயத்துடனும் இரு. நீ உன்னை ஒரு பெரிய மனிதனாகப் பாவித்துக் கொள்ளாதே ; பரமாத்மாவினுடைய தாழ்ந்த தொண்டனாகவே உன்னை எண்ணிக் கொள்; அபாயத்தைப் பற்றிய சிந்தனையேயின்றி, சேவை புரிய எப்பொழுதும் தயாராக இரு, கடவுளை நினைத்துக் கொண்டும், தூய வாழ்க்கையை வாழ்ந்தும் கொடிய அகால மரணத்தையடைய நேரிடினும் அதுவே மேன்மையென்பதை ஞாபகத்தில் வை ; அங்ஙனமின்றி, சுகபோகங்களுடன் வாழ்வதாயினும், அது <உன்னை உனது இலட்சியத்தினின்றும் நழுவச் செய்துவிடும் ; இதை விடப் பெரியதோர் சாமில்லை. எப்பொழுதும் கவனத்துடனிரு ; ஏதோவொரு சமயம் நேரும் மனோபலக் குறைவினால் உனதனைத்தையும் நீ இழந்துவிடாதே. தைரியமாய்ப் பயமின்றி நட ; ஒரு பொழுதும் பொறுமையை இழக்காதே
வெளி விஷயங்களில் நீ சார்ந்து நிற்காதே ; வெளித் தோற்றமாகிய வார்த்தைகள் ஹிருதயத்தினுடைய ஆழ்ந்த உணர்ச்சிகளை ஒருக்காலும் தோற்றுவிக்க முடியாதென்பதைத் தெரிந்து கொள். அதிகமாக வார்த்தையாடாதே. ஒளியை யளிப்பது வார்த்தைகளல்ல ;  வெகு அழகான பாஷையுமல்ல ; நம்முடைய குணமே, இயற்கையே அதையளிக்கும். தீர்க்கதரிசிகளான மகான்கள் மிக இலகுவான பாஷையிலேயே பேசினார்கள் ; ஆனால் அவர் சொற்களில் ஒளி, உயிர், நம்பிகை, தைரியம் யாவும் ததும்பி நின்றன. பக்தி ஆகிய செடி <உன் ஹிருதயத்தினுள் மௌனமாக வளரட்டும் ; மெய்ப் பக்தியினுடைய ஆனந்த பாஷ்பத்தினால் அதற்குத் தண்ணீர் வார். பலன்கள எதிர்பாராதே ; ஹிருதய பூர்வத்துடன் சேவைமட்டும் செய்து கொண்டிரு.
மெய்ப் பக்தன் தன் உயர்ந்த இலட்சியத்திற்கேயன்றி, வேறெவர் பொருட்டும் உழைப்பதில்லை. அவன் உண்பது, குடிப்பது, உறங்குவது, அசைவது ஆகிய ஒவ்வொரு செய்கையும் கடவுளைத் தொழுவதே யாகும். தனது இஷ்ட தெய்வத்திற்கே தன் யாவும் சொந்தமென அவன் நம்புகிறான். தன் சரீரமுங்கூடத் தனது தெய்வத்தினுடையதாகவே கருதித்தான் அவன் அதற்கு உணவளித்து இரக்ஷிக்கிறான். சரீரத்திற்குத் தீங்கு நேர்ந்தாலும், பசியுண்டானாலும், ஜலதோஷ மேற்பட்டாலும், எவ்விதத்திலாவது அதற்குக் கவனக் குறைவு ஏற்பட்டாலும் தனது இஷ்ட தெய்வ துன்புறுகிறது என அவன் எண்ணுகிறான். அதனால், தன் அன்பனின் பொருட்டே, அவன் அதைப் பற்றிக்கவலை கொள்கிறான். அல்லது, தன் சரீரத்தை ஒரு கோயிலாகவும், அதனுள் தன் இஷ்ட தெய்வம் உள்ளதெனவும் அவன் கருதலாம்; அப்பொழுது சரீரத்திற்குச் செய்வது யாவும் தன் அன்பனுக்கே சமர்ப்பிக்கப்படுகின்றன. அதனால் பூர்ண பரிசுத்தமானதும், ஹிருதயமெனும் கர்பக்கிருகத்தில் ஸமர்ப்பிக்க யோக்கியதையுடையதுமான வஸ்துக்களையே அவன் சரீரத்திற்கு அளிக்க ஜாக்கிரதையுட னிருக்கிறான். இஷ்ட தெய்வம் தன்னுள்ளிருப்பதாக இடைவிடாது சிந்தனை செய்வதனால், சரீர பந்தங்களிலிருந்தும் விடுதலையடையச் சாத்தியமாகிறது.

No comments:

Post a Comment