Without devotion, knowledge is tasteless. Without knowledge, devotion is mere empty idol worship- SWAMI CHINMAYANANDA
Friday, May 11, 2012
எங்கும் இருப்பவர் இவர்
இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறார் என்பதால் தூணிலும் இருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார் என்று குறிப்பிடுவர். கடவுளுக்கு விஷ்ணு என்ற திருநாமம் உண்டு. விஷ்ணு என்றால் எங்கும் வியாபித்திருப்பவர் என்று பொருள். ஆனாலும், எங்கு இருக்கிறார் என்று கண்டுபிடிக்க இயலாது. பூமியில் தண்ணீர் இல்லாத இடம் இல்லை. எங்கும் நிறைந்திருக்கிறது. ஆனால், எல்லா இடத்திலும் ஊற்றெடுப்பதில்லை. யாரொருவர் முயற்சியுடன் கடப்பாரையால் பூமியைத் தோண்டுகிறாரோ அங்கே நீர் சுரக்கிறது. அதுபோல, உள்ளத்தை பக்தி என்னும் கடப்பாரை கொண்டு தோண்டினால் அங்கே அருள் சுரக்கும். உலக ஆசை என்னும் மண்பரப்பு அருள் என்னும் நீரை மூடி இருக்கிறது. அந்த ஆசை மண்ணைத் தோண்டி ஓரமாகக் கொட்டிவிட்டால், அருள் வெளிப்படத் தொடங்கிவிடும். ஆன்மிகத்திற்கு மட்டுமல்ல, வாழ்வில் எதைப் பெற வேண்டுமானாலும் முயற்சி தேவை. அது விடாமுயற்சியாகத் தொடர்ந்து இருத்தல் அவசியம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment