Tuesday, June 12, 2012

                       
           இறைவனுக்கு நாம் தேங்காய் உடைத்து வழிபடும் முறை பல்வேறு தத்துவங்களை உணர்த்துவதாக உள்ளது.  தேங்காயின் உட்புறம் உள்ள இனிய இளநீர், பரமானந்தபேறைக் குறிக்கிறது. இந்த நீரை சூழ்ந்திருக்கும் ஓடு, அதனை உணர முடியாமல் நம்மை சுற்றியிருக்கும் மாயையான உலகைக்குறிக்கிறது. தேங்காயை இறைவனின் திருச்சன்னதியில் உடைப்பதன் மூலம் நம்மை சூழ்ந்துள்ள மாயையை தகர்த்தெறிந்து பரமானந்தமான பேரமுதை அடையும் செயலை உணர்த்துகிறது.  இதேபோல், இச்செயலுக்கு மற்றோர் அர்த்தமும் கூறப்படுகிறது. தேங்காயை உடைத்து இறைவனுக்கு படைக்கும் போது அதிலுள்ள நீர் வடிந்து வெளியேறுகிறது. அதுபோல, இறைவனின் திருப்பாதம் பணியும் நாம் நமது மனதில் உள்ள ஆசைகளை வடித்து வெளியேற்றி, உள்ளத்தை தூய்மைப்படுத்தி இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதாகும்

No comments:

Post a Comment