Thursday, July 5, 2012

சிவனுக்கும் சனி

                                 

        ஒருமுறை சிவனுக்கும் சனி     பிடிக்கும் வேளை வந்தது. அதனைத் தவிர்க்கும் எண்ணத்தில், ஒரு குகைக்குள் சென்று அதன் வாசலை மூடிக் கொண்டார். கண் மூடி தியானத்தில் ஆழ்ந்தார். நீண்டநாள் கழித்து வெளியில் வந்தபோது, வாசலில் சனி நின்றார். ஏழரை ஆண்டுகள் கழிந்துவிட்டது. சனியிடம் சிவன், நான் உன் பிடியில் சிக்காமல் தவத்தில் இருந்துவிட்டேன் பார்த்தாயா?, என்று சொல்லி சிரித்தார். அதற்கு சனி,இந்த ஏழரை ஆண்டுகளாக, ஒரு குகைக்குள் அமர வைத்து, பார்வதிதேவியிடம் இருந்து பிரித்து வைத்ததே நான் தானே, என்றார். இறைவன் என்றும் பாராமல் கடமையைச் சரிவரச் செய்த சனியைப் பாராட்டிய சிவன், அவருக்கும் ஈஸ்வரன் என்ற சிறப்புப் பட்டத்தை வழங்கினார். இதனாலேயே நவக்கிரகங்களில் சனியை மட்டும் சனீஸ்வரர் என்கின்றனர்.
                            

No comments:

Post a Comment