Sunday, September 16, 2012

பாவிகள் நன்றாக இருப்பது ஏன்?

                                   
* ஒருவர் எடுத்த செயலில் வெற்றி பெற்றுவிட்டால், அவரை போற்றுபவர்கள் இச்செயலை அவர் சிரத்தையுடன் (கவனமாக)செய்தார், அதனால்தான் வெற்றி பெற்றார் என்று சொல்லித்தான் பாராட்டுவர். சிரத்தை என்ற சொல்லிலேயே அவர் மிகவும் நம்பிக்கையாகவும், கடுமையாகவும் உழைத்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே, நம்பிக்கையுடையவர்களாக இருங்கள்.



* எல்லா மதங்களும் நல்லவர்கள் நன்மையே அடைவார்கள் என தான் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் நடைமுறையில், பாவம் செய்பவர்கள் நல்ல நிலையிலும், புண்ணியம் செய்பவர்கள் துன்ப நிலையிலும் வாழ்வதைக் காண்கிறோம். அதற்காக மதங்கள் சொல்வதைப் பொய் என்று எண்ணக்கூடாது. ஒரு பிறவியில் பாவம் செய்வதன் கர்மபலனுக்கு ஏற்ற வாழ்க்கை, அந்த பிறவியிலேயே கிடைத்துவிடும் என்பதில்லை. அதற்கான பலன் மறுபிறவியிலும் கிடைக்கலாம். பாவம் செய்பவன் நன்றாக இருக்கிறான் என்றால், அவன் முற்பிறவியில் புண்ணியம் செய்தவனாக இருந்திருக்கலாம். இதைப்போலவே, புண்ணியம் செய்பவன் முற்பிறவியில் செய்த பாவத்திற்கேற்ப பாவத்தை அனுபவிக்கிறான். இதுவே உண்மையும் ஆகும்.







* எந்த செயலையும் முடியவில்லை அல்லது சரியாக செய்ய முடியாது, அல்லது வெற்றி காண முடியாது என்று எண்ணி துவங்காதீர்கள். நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். எடுத்த செயலில் வெற்றிக்காக போராடுங்கள். லட்சியத்துடன் அதனை அடைவதற்கான முயற்சியை அதிகப்படுத்துங்கள்.

No comments:

Post a Comment