குருவின் முன் சீடர்கள் அடக்கத்தின் அடையாளமாக வாயைக் கையால் பொத்தி நிற்பதுண்டு. உயிரினங்களில் இயற்கையாகவே கையால் வாய் மூடி இருப்பது யானைக்கு மட்டுமே. இந்த தும்பிக்கை மூலம் விநாயகர் பெரிய தத்துவத்தை உணர்த்துகிறார். எவ்வளவு தான் கல்வி அறிவு பெற்றிருந்தாலும் தொண தொண என்று யாரும் வீணானதை பேசக்கூடாது. ஞானத்தின் அடையாளம் மவுனம் தான். வாயைத் திறந்தால், நல்ல விஷயங்கள் மட்டுமே வர வேண்டும். இதனால் தான் விநாயகரை ஸுமுகர் என்பர். இதற்கு நல்ல வாயை உடையவர் என்று பொருள். நல்ல விஷயங்களை பேசுபவர்களின் வீட்டில் எப்போதும் சுமூகமான நிலை இருக்கும். ஒரு இடத்தில் ஏதாவது பிரச்னை என்று வந்து விட்டால், சுமூகமான பேச்சு நடத்த வேண்டும். இல்லாவிட்டால் பிரச்னை பெரிதாகி விடும். ஞானத்தை அருளும் வித்யாகணபதியை வழிபட்டு வந்தால், நாம் இருக்கும் இடத்தில், சுமூகம் நிலவும்.
Without devotion, knowledge is tasteless. Without knowledge, devotion is mere empty idol worship- SWAMI CHINMAYANANDA
Thursday, November 15, 2012
பேச்சைக் குறையுங்க!
குருவின் முன் சீடர்கள் அடக்கத்தின் அடையாளமாக வாயைக் கையால் பொத்தி நிற்பதுண்டு. உயிரினங்களில் இயற்கையாகவே கையால் வாய் மூடி இருப்பது யானைக்கு மட்டுமே. இந்த தும்பிக்கை மூலம் விநாயகர் பெரிய தத்துவத்தை உணர்த்துகிறார். எவ்வளவு தான் கல்வி அறிவு பெற்றிருந்தாலும் தொண தொண என்று யாரும் வீணானதை பேசக்கூடாது. ஞானத்தின் அடையாளம் மவுனம் தான். வாயைத் திறந்தால், நல்ல விஷயங்கள் மட்டுமே வர வேண்டும். இதனால் தான் விநாயகரை ஸுமுகர் என்பர். இதற்கு நல்ல வாயை உடையவர் என்று பொருள். நல்ல விஷயங்களை பேசுபவர்களின் வீட்டில் எப்போதும் சுமூகமான நிலை இருக்கும். ஒரு இடத்தில் ஏதாவது பிரச்னை என்று வந்து விட்டால், சுமூகமான பேச்சு நடத்த வேண்டும். இல்லாவிட்டால் பிரச்னை பெரிதாகி விடும். ஞானத்தை அருளும் வித்யாகணபதியை வழிபட்டு வந்தால், நாம் இருக்கும் இடத்தில், சுமூகம் நிலவும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment