Thursday, November 15, 2012

நான் என்னும் நரகம்

                                                 
                       ஒரு அரசனை துறவி ஒருவர் சந்தித்தார். அரசன் அவரிடம், துறவியாரே! என் நாட்டு மக்களுக்காக நான் தங்கும் விடுதிகள் கட்டியுள்ளேன். கோயில்களை ஏராளமாகப் புதுப்பித்திருக்கிறேன். ஆன்மிக நூல்கள் வெளிவர பொருளுதவி செய்து உள்ளேன். ஏழை களுக்கும், இங்கு வரும் வெளிநாட்டினருக்கும் தினமும் அன்ன தானம் செய்கிறேன், என்று பட்டியலை நீட்டிக் கொண்டே போனார். துறவி ஓகோ! அப்படியா! என்று தலையை அசைத்து விட்டு அமைதியாய் இருந்தார். அரசனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. தனக்கு அவரிடம்இருந்து பாராட்டு கிடைக்குமென நினைத்து ஏமாந்த அவன், துறவியே! நான் இவ்வளவு சேவை செய்துள்ளேனே! எனக்கு சொர்க்கம் நிச்சயம் தானே! என்றான். இல்லை என்ற துறவியை அதிர்ச்சியுடன் ஏன்? என்று வினவினான் மன்னன். அரசே! நீ பல சேவைகள் செய்தாலும் அதை நான் தான் செய்தேன் என்ற ஆணவத்துடன் இருக்கிறாய். ஆணவம் ஒரு நஞ்சு. அது உனக்கு கிடைக்கும் புண்ணியத்தில் கலந்து விட்டது. எனவே உனக்கு சொர்க்கமில்லை, நரகம் தான், என்றார். சேவை செய்வதில் தற்பெருமை கூடாது புரிகிறதா

No comments:

Post a Comment