Saturday, November 17, 2012

நல்ல நண்பனின் அடையாளம்

                                       
*உங்களது தவறையும், குறையையும் ஒப்புக் கொள்ளுங்கள், அவ்வாறு செய்தாலே நீங்கள் திருந்த வழிபிறக்கும்.
* தன்னலமற்ற, பணிவுடைய தொண்டினால் இதயத்தைத் தூய்மைப்படுத்துங்கள், புலனின்பம் ஒரு பொழுதும் நிறைவைத் தராது என்பதை உணரக் கற்றுக் கொள்ளுங்கள்.
* மனிதனின் கற்பனைக்கு எட்டாதவராக விளங்குகிறார் கடவுள். ஆனால் அவர் வாழும் உண்மை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
* மனித முயற்சியைத் தெய்வீகத் திருவருள் தாங்கி நிற்க வேண்டும். அப்பொழுது தான் இறையருளை பெறுவது சாத்தியப்படும்.
* படுமோச நிலையையும் வீரமுடன் எதிர்த்து நில்லுங்கள், சிறந்தவற்றைப் பெறத் தைரியத்துடன் போராடுங்கள்.
* நல்ல நண்பன் உங்களின் சந்தோஷத்தை அதிகரிக்கச் செய்வதோடு, உங்கள் சங்கடத்தில் பங்கும் கொள்கிறான்.
- சிவானந்தர்

No comments:

Post a Comment