Sunday, January 6, 2013

ஐஸ்வர்யம் அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர விரதம்

                         
                          ‘‘ஒரு வெள்ளிக்கிழமையைத் தேர்ந்தெடுத்துக்கோங்க. அந்த நாள்ல அஷ்டமி, நவமின்னு திதி இல்லாம இருக்கறது நல்லது. அதோட அன்னிக்கு அமிர்த யோகம் அல்லது சித்தயோகம்னு இருந்தா ரொம்ப விசேஷம்..’’
                    அதுக்கு முந்தின நாளே சில பூஜைப் பொருட்களை ரெடி பண்ணி வெச்சுக்கணும். லக்ஷ்மி படம், குபேரன் படம், குபேர யந்திரம், லக்ஷ்மி குபேரன் இணைந்த படம் அப்படின்னு லக்ஷ்மி, குபேரன் சம்பந்தப்பட்டதை எடுத்து சுத்தமா துடைச்சு வெச்சுக்கணும்.’’
படமா இல்லாம விக்ரகமாக இருந்தாலும் ரொம்ப விசேஷம்தான்..’’
                       ‘‘மஞ்சள்தூள், குங்குமம், தேங்காய், வெற்றிலை-பாக்கு, சந்தனம், பழம், பூ, சாம்பிராணி, கற்பூரம், நவதான்யம், தலைவாழையிலை எல்லாத்தையும் வாங்கி வெச்சுக்கறது நல்லது. அவங்கவங்க சக்திக்கேற்றபடி முடிஞ்ச அளவிலே அந்தப் பொருட்களை வாங்கி வெச்சுக்கலாம்.’’
                         வெள்ளிக்கிழமை அதிகாலையிலேயே  விடியற்காலையிலேயே எழுந்து, குளிச்சுட்டு, சுத்தமான உடைகளை அணிசுகிட்டு, நெற்றியில் குங்குமம் இட்டுக்கணும். அன்னிக்கு சௌகரியமாக பத்தரை-பன்னிரண்டு மணி ராகு காலம்ங்கறதனால, பத்தரை மணிக்கு முன்னால பூஜையை முடிக்கறா மாதிரி திட்டமிட்டுக்கலாம்.

                        அதிகாலை நேரத்திலே, லக்ஷ்மி குபேரன் படத்தை எடுத்து, அதுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு பூஜையறையிலே வைச்சுக்கணும். படத்துக்கு முன்னால தலை வாழையிலையை வெச்சு, அதுக்கு மேலே நவதானியங்களையும் தனித்தனியாக, சுற்றிவர பரப்பி வைக்கணும். அதுக்கு நடுவிலே, சுத்தமான தண்ணீர் நிரப்பின ஒரு சொம்பை வைச்சுக்கணும். இந்தத் தண்ணீருக்குள்ள கொஞ்சம் மஞ்சள் தூளைப் போட்டுக் கலந்துக்கணும். சொம்பு வாய்க்குள்ள ஒரு மாவிலைக் கொத்தைச் செருகி அது நடுவிலே ஒரு தேங்காய்ல மஞ்சள் பூசி நிறுத்தினா மாதிரி வைக்கணும். வெற்றிலை, பாக்கு, பழம்...’’
‘‘வாழைப்பழம் வைக்கறது நல்லது. இப்படி வாழைப்பழத்தை பூஜைக்காக வைக்கறதிலே ஒரு தத்துவம் இருக்கு தெரியுமோ?’’ ‘‘வாழைப்பழத்திலே தத்துவமா?’’
                        பழத்தை சாப்பிட்டுட்டு அந்த விதையை நிலத்திலே எறிஞ்சோம்னா அது, அந்தப் பழம் தர்ற செடியோ மரமோ மறுபடி முளைக்கும். ஆனா வாழைப்பழத்திலே மட்டும் அப்படி இல்லே. தூக்கிப் போடறது தோலைத்தான். அதனால வாழை மரத்துக்கு மட்டும் விதை, கிதைன்னு எதுவும் கிடையாது. வாழைக்கன்றுதான். அந்தக் கன்றை நட்டு வெச்சா அது மரமாக வளரும். அதுக்குக் கீழே இன்னொரு வாழை வளரும். அதாவது வாழைப்பழத்திலேர்ந்து இன்னொரு வாழை மரம் வளராதுங்கறது, மறுபிறவி இல்லாத ஒரு நிலைமையை மனிதன் அடையணும்ங்கற தத்துவம்தான் வாழைப்பழத்தை நிவேதனம் செய்யற நடைமுறை.’’
                             இது மாதிரி பூஜைகள்ல விநாயகர் விக்ரகத்தை முன்னே வெச்சு அவரோட ஆசிர்வாதத்தால பூஜை நல்லபடியா நடந்து முடியணுமேன்னு வேண்டிக்கறது வழக்கம். பெரும்பாலும் விநாயகர் சதுர்த்தி அன்னிக்கு நாம் வாங்கி பூஜை பண்ற பிள்ளையார் சிலையை மறுநாள் கிணற்றிலோ, கடல்லேயோ கொண்டுபோய் போட்டுடறோம் இல்லையா, அதனால விநாயகரை இதுமாதிரி ஒவ்வொரு பூஜையிலேயும் மஞ்சள் பொடியில பிடிச்சு வெச்சுக்கறோம்

                               ‘‘மஞ்சள் பொடியில எப்படி பிடிக்கறது?’’ ‘‘மஞ்சள் தூள்ல கொஞ்சமா தண்ணீர் விட்டு ஒரு கூம்பாகப் பிடிச்சுக்கலாம். பிள்ளையார் மாதிரி தும்பிக்கை, தந்தம்னு பண்ணிக்க முடியாட்டாலும் ஒரு ஊகமாக பிள்ளையாரைப் பிடிச்சு வெச்சுக்கறது வழக்கம். இந்தப் பிள்ளையாரை வாழையிலையின் வலதுபக்கம் மேலே ஓரமாக வைக்கணும். இதுக்கும் குங்குமம் இட்டுவிடணும். படம், கலசத்துக்கு சாத்தர பூச்சரத்திலேர்ந்து கொஞ்சம் கிள்ளியோ அல்லது உதிரிப் பூவாகவோ இந்த மஞ்சள் பிள்ளையாருக்கும் வைக்கணும். ஊதுவத்தி கொளுத்தி வைக்கணும்.’
                         ‘‘இந்த பூஜையமைப்பை மேற்கு பார்த்தா மாதிரி வெச்சுக்கிட்டா கிழக்கு பார்த்து பூஜை பண்ண வசதியாக இருக்கும். கிழக்கு-மேற்கு திசை உங்க வீட்டமைப்புக்கு வசதியாக இல்லேன்னா, வடக்கு திசை பார்த்து பூஜை பண்றா மாதிரி ஏற்பாடு பண்ணிக்கலாம்.
ஆனா பூஜைக்கான படம் கிழக்கு அல்லது மேற்கு திசை பார்த்தபடி இருக்கறதுதான் நல்லது

                         இப்ப உங்களுக்குத் தெரிஞ்ச பிள்ளையார் பாடல் எதையாவது சொல்லுங்க. பிள்ளையார் மந்திரம், அஷ்டோத்திரம்னு எது தெரியுமோ அதையெல்லாம் சொல்லலாம்.’’
அடுத்ததாக உங்களுக்குத் தெரிஞ்ச லக்ஷ்மி ஸ்லோகம், பாட்டுன்னு ஏதாவது சொல்லலாம். கையிலே அந்த ஸ்தோத்திர புத்தகங்கள் இருந்தா அதைப் பார்த்தும் படிக்கலாம். எந்த சுவாமியைப் பத்தியும் ஸ்லோகமோ பாட்டோ தெரியாதே, வீட்ல ஸ்லோக புத்தகம்கூட இல்லியேன்னு யோசிக்க வேண்டாம். ஆனைமுகனே போற்றி, விநாயகா போற்றின்னு சொல்லிக்கிட்டே இருக்கலாம்.

அடுத்து அஷ்ட லக்ஷ்மியே போற்றி, குபேர லக்ஷ்மியே போற்றி, தன லக்ஷ்மியே போற்றின்னு கூட சொல்லிக்கிட்டே இருக்கலாம். குபேர ஸ்துதி தெரிஞ்சா அதையும் சொல்லலாம். தெரியலேன்னா, ‘குபேராய நமஹ, வைஸ்ரவணாய நமஹ, தனபதியே நமஹ’ன்னு சொல்லி அர்ச்சனையை முடிக்கலாம்.’’
‘‘உதிரிப் பூக்களால இப்படி அர்ச்சனை பண்ணினப்புறம் ‘‘சாம்பிராணி போடணும். அந்தப் புகையை வீடு முழுக்க எடுத்துகிட்டுப் போய்க் காட்டலாம். வாழைப்பழம், காய்ச்சின பசும்பால், பாயசம்னு முடிஞ்ச பொருட்களை லக்ஷ்மி குபேரனுக்கு நைவேத்யமாகக் காட்டுங்க. அப்புறமா கற்பூரம் காட்டி மணியடிச்சு பூஜையை நிறைவு செய்யலாம், வெற்றிலைபாக்கு, பழங்களையும் தட்சணை காசையும் யாராவது ஏழை சுமங்கலிப் பெண்ணுக்குத் தரலாம். அப்புறம் பொதுவான ஒரு வேண்டுதலையும் குபேரன் முன்னால வைக்கணும்.’’

No comments:

Post a Comment