முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்றாலும் அந்நாளில் முருகப்பெருமானுடன் சிவபெருமானையும் வழிபடுதல் வேண்டும். தைப்பூச நாளின் சிறப்புகள் பற்றிப் பார்ப்போம். தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக கூறப்படுகிறது. உலக சிருஷ்டியில் தண்ணீரே முதலில் படைக்கப் பெற்றது. அதிலிருந்தே பிரம்மாண்டம் உண்டானது எனும் ஐதீகத்தை உணர்த்துவதற்காகவே, கோயில்களில் தெப்ப உற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருவிடைமருதூர் கோயிலில் பிரம்மோற்சவம் தைப்பூசத்தன்று நடைபெறுகிறது. அங்கு தைப்பூசத்தன்று முறைப்படி தரிசனம் செய்து, அங்குள்ள அசுவமேதப் பிரகாரத்தை வலம் வந்தால், பிரும்ம ஹத்தி தோஷம் நீங்கும்.
சோழ மன்னர் ஒருவரைப் பின் தொடர்ந்து வந்த பிரும்மஹத்தி கோயில் வாசலில் நின்று விட்டதால், அங்கு கோயிலின் வாயிலில் ஒரு பிரும்மஹத்தி வடிவம் அமைக்கப் பட்டுள்ளது. சிவபெருமான் தனது அம்பிகை உமாதேவியுடன் இருந்து ஞானசபையான சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த
புண்ணியத் திருநாள் தைப்பூசம். வேத ஒலியும், வாத்திய ஒலியும், வாழ்த்தொலியும் - ஒலிக்க சிவபெருமான் நடத்திய அந்த ஆனந்தத் திருநடனத்தை; வியாக்கிர பாத முனிவர், பதஞ்சலி முனிவர், தில்லை மூவாயிரவர், தேவர்கள், பிரம்மா, விஷ்ணு உள்ளிட்டோர் சிவபெருமானை தரிசித்து ஆனந்தமடைந்தார்கள்.
பிறகு பதஞ்சலி முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க எல்லா ஆன்மாக்களும் உயர்வு அடைவதற்காக சிதம்பரத்திலேயே, என்றும் ஆனந்த நடனக் கோலத்தைக்
காட்டி அருள் புரிந்து கொண்டிருக்கிறார்.சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, சித்சபேசனான நடராஜப் பெருமானை, இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இப்புண்ணிய தினத்தன்று தான். அதன் காரணமாகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
தேவ குருவாகிய பிரகஸ்பதி பகவானுக்கு உகந்த தினம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.`அருட்பெருஞ் ஜோதி - தனிப்
பெருங்கருணை‘ எனும் மகாமந்திரத்தை உலகுக்குத் தந்த வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஆன்மீக உண்மையை உலகுக்கு உணர்த்தி, ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் இறைவனுடன் இரண்டறக் கலந்தார். இதனைக் குறிக்கும் விதமாக அவர் சமாதியான வடலூரில், தைப்பூசத்தன்று லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.
தைப்பூசம் என்றால் என்ன?
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்திலே பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப் படுகின்றது. தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக (பறுவம்) இருக்கும்.தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேட தினமாகும். அன்றைய தினம் குழந்தைகளுக்கு தோடு குத்துதல், ஏடு தொடக்குதல் போன்றவற்றை சிறப்பாக செய்து வைப்பார்கள். மற்றும் அடியார்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவார்கள்.இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில் களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
. தைப்பூசத்தன்று முருகப் பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர். வரலாறு தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து
வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை.
எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர். கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்களால், அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது. அப்படி அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார். சிவபெருமானின் தேவியான அன்னனை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான்.
அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான். தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருக கடவுள். எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.
தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கு கின்றனர். சஷ்டி கவசம், சண்முக கவசம்,
திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள்.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு
செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்து வதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக்கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டால் அவர்களைப் பிடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப்பூர்வமாக அனுபவித்துள்ளனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள்.
தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும்.பண்டைய காலத்தில் இந்து மதத்தின் கோட்பாடுகள் பரவலாக முறையற்று இருந்தது. இவற்றை ஆதிசங்கரர் முறைப்படி நெறிப்படுத்தி ஆறு சித்தாந்தங்;களாக தொகுத்தார். முக்கியமாக வழிபடும் தெய்வங்களின் அடிப்படையில் இந்த சித்தாந்தங்கள் வகுக்கப்பட்டன.
சித்தாந்தம். தெய்வம்.
1.) சைவம். சிவன்.
2.) வைணவம். விஸ்ணு.
3.) சாக்தம். சக்தி.
4.) சௌரம். சூரியன்.
5.) கணாபத்தியம். கணபதி.
6.) கௌமாரம். முருகன்.
இவற்றுள் முருகனை முக்கிய தெய்வமாக வழிபடும் இந்து மதத்தின் உட்பிரிவு கௌமாரம் ஆகும். முருகக் கடவுளின் வழிபாட்டிற்கான விரத, திருவிழா நாட்களில் முக்கியமான ஒன்று தைப்பூசம் ஆகும். விழா என்றால் விழித்திருந்து செய்வது என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்திலேயே வரும். இந்த நாட்களெல்லாம் சிறப்புமிக்க விழா நாட்களாகும்.
மாதம் நட்சத்திரம்.
1.) தை. பூசம்.
2.) மாசி. மகம்.
3.) பங்குனி. உத்தரம்.
4.) சித்திரை. சித்திரை.
5.) வைகாசி. விசாகம்.
6.) ஆனி. கேட்டை.
7.) ஆடி. உத்திராடம்.
8.) ஆவணி. அவிட்டம்.
9.) புரட்டாசி. பூரட்டாதி.
10.) ஐப்பசி. அசுவினி.
11.) கார்த்திகை. கார்த்திகை.
12.) மார்கழி. திருவாதிரை.
இதில் தைப்பூசத்திருநாளில் முருகக் கடவுளிற்கு படைக்கும் காணிக்கைகளை காவடிகளாக எடுத்துக் கொண்டு நடைபயணமாக அவர் சன்னதி வந்து காணிக்கைகளை அவரிற்கு செலுத்தி பூசிப்பது தான் தைப்பூச திருநாளின் சிறப்பாகும். முருகப்பெருமானிற்கு கடியுண் கடவுள் என்றும் ஒரு பெயர் உள்ளத. புதியதை உண்பவர் என்று இதற்கு பொருளாகும். வாழையோ, நெல்லோ, பழங்களோ தமது இடத்தில் எது விளைந்தாலும் தான் உண்பதற்கு முன் அதை இறைவனிற்கு அர்ப்பணித்துப் படைப்பதிற்கும், ஆடு,மாடு, கோழி போன்றவற்றை காணிக்கையாக அர்ப்பணிப்பதற்கும் (இவற்றை பலியிடுவதற்கு அல்ல,அர்ப்பணிப்பதற்கு மட்டும், அதாவது நேர்ந்து கோவிலில் விடுதல் என்பர்.)
பயணிக்கும் விரத விழாவே தைப்பூச திருவிழாவாகும். முருகனின் அறுபடை வீடுகளில் பழனியிற்கே மக்கள் முக்கியத்துவம் கொடுத்து தைப்பூச திருவிழாவிற்கு நடைபயணமாக செல்வது தொன்று தொட்டு செல்வது வழக்கமாகிவிட்டது. அறுபடை விடுகளில் பழனியிலே மிகச் சிறப்பாக தைப்பூச விருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.சிவபெருமான் அன்னை உமாதேவியாருடன் கூடி ஞானசபையில் ஆனந்த நடனம் ஆடியதும் தைப்பூசத்திருநாளில்த்தான் தில்லை மூவாயிரவர்க்கும், இரணியவர்மனிற்கும் நடராஜர் தரிசனம் தந்து அருள் பாலித்தும் தைப்பூசத்திருநாளில்தான் பழனி திருக்கோவிலின் சிறப்பு. முருகன் தனக்கு ஞானப்பழம் கிடைக்காததால் தாய்,தந்தையுடன் கோபித்துக் கொண்டு சென்று தனித்து நின்ற இடம் தான் பழனி. கையில் தண்டுடன் நின்ற காரணத்தினால் இங்கிருக்கும் மூலவரிற்கு தண்டாயுதபாணி என்று பெயர். (அதாவது தண்டை ஆயுதமாகக் கொண்டவர்) இங்கிருக்கும் மூலவர் விக்கிரகம் நவபாசாணத்தினாலானது.
பாசாணம் என்றால் கொடிய விசம் ஆகும். ஒன்பது வகை கொடிய விசப்பொருட்களின் விசத்தன்மையை சில அரிய மூலிகைச்சாறுகளின் மூலம் நீக்கி எந்த நோயையும் நீக்கும் அருமருந்தாக ஆக்கி அதனைக்கொண்டு போகர் என்ற சித்தரினால் செய்யப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டதே பழனியிலுள்ள மூலவர் ஆகும். பழனி மூலவரிற்கு அபிசேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தத்தையுண்டால் எந்தப்பெரிய நோயானுலும் தீர்ந்து விடும் என்பது ஐதீகம். பஞ்சாமிர்தம் பஞ்ச அமிர்தம் அதாவது ஐந்து வகை அமிர்தம் ஆகும். இது அமிலத்தன்மையுடையது. அதாவது அரிக்கும் இயல்புடையது. இதன் மூலம் அபிசேகம் செய்யப்படும் போது மூலவரில் இருக்கும் நவபாசாண மருந்து பஞசாமிர்தத்தில்கலக்கிறது. அதனையுண்ணும் போது நோய்கள் குணமாகின்றன. பழனித்திருக்கோவிலின் பிரசாதம் இந்தச் சிறப்பு பஞசாமிர்தமாகும்.
தைப்பூச விரத முறை
தைப்பூசம் அன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, திருநீறு, ருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம் போன்ற சிவஞான நூல்களைப் பாராயணம் செய்ய வேண்டும். இதேபோல், மாலையிலும் குளிந்து விட்டுச் சிவபூஜை செய்ய வேண்டும். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று சிவபூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். முருகப்பெருமானுக்கு விரதம் இருப்பவர்கள், அவர் எழுந்தருளி அருள் பாலிக்கும் கோவிலுக்குச் சென்று வழிபடுவதோடு கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றைய தினம் முழுவதும் பாராயணம் செய்ய வேண்டும்.

No comments:
Post a Comment