Monday, March 18, 2013

அர்ச்சித்தால் ஐஸ்வர்யம்

                      
                          எல்லோரும் லாபம் சம்பாதிக்கவே வியாபாரம் நடத்துகிறார்கள். வியாபாரத்தில் லாப, நஷ்டம் சகஜம் தான் என்றாலும், சிலருக்கு மட்டும் எப்போதும் வியாபாரம் லாபகரமாக நடக்கிறது. சிலரோ, நஷ்டம் ஏற்பட்டு மனவருத்தத்திற்கு ஆளாகின்றனர். இதனால், கடன், மன உளைச்சல் போன்ற வேறுபல பிரச்னைகளும் ஏற்பட்டு விடும். இதில் இருந்து மீள்வதற்கு எளிய பரிகாரங்கள் இருக்கின்றன. இதனை மேற்கொண்டால் படிப்படியாக லாபம் உயர்வதை கண்கூடாக அனுபவிக்கமுடியும்.  லட்சுமி குபேரருக்கு நவநிதிகளை வாரி வழங்கியவர் சிவபெருமான். அவருக்குரிய பிரதோஷநாளில் விபூதியால் அபிஷேகம் செய்து வில்வஇலையால் அர்ச்சித்தால் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். கார்த்திகை சோமவாரத்தில் சிவசந்நிதியில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவதும் சிறந்த பரிகாரம். லட்சுமியின் அம்சமாகத் திகழும் பசுவிற்கு வெள்ளிக்கிழமையில் கீரை, பழம் போன்றவற்றை கொடுத்தாலும் லாபம் பெருகும்

No comments:

Post a Comment