சிவனுக்குரிய விரதங்களில் சோமவார விரதம் முதன்மையானது. கார்த்திகை மாத திங்களன்று இவ் விரதம் மேற்கொள்வர். இவ்விரதம் அனுஷ்டிப்பவர்கள் மதியம் சாப்பிடலாம். காலை, இரவில் பால், பழம் எடுத்துக் கொள்ளலாம். சிவாலய தரிசனம் அவசியம் செய்ய வேண்டும். அவரவர் வசதிக் கேற்ப சிவனுக்கு அபிஷேகம், வில்வார்ச்சனை, விளக்கேற்றுதல் ஆகிய வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விரதம் மேற்கொண்ட வசிஷ்டர், கற்புக்கரசி அருந்ததியை மனைவியாகப் பெறும் பாக்கியம் பெற்றார். சீமந்தினி என்பவளுக்கு மாங்கல்ய தோஷம் இருந்தது. இதுபற்றி, யாக்ஞவல்கியரின் மனைவி மைத்ரேயிடம் சொல்லி வருந்தினாள். மைத்ரேயி, அவளுக்கு சோமவார மகிமையை உணர்த்தினாள். சீமந்தினியும் விரதம் மேற்கொண்டு சிவபார்வதி அருளால் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் பெற்றாள்
No comments:
Post a Comment