*அடுத்தவர்களுடைய அந்தரங்கத்தைக் கூட அறிந்து வைத்திருக்கும் நாம், நம்மைப் பற்றி தெரிந்திருப்பது என்னவோ வெறும் பூஜ்யம் தான்.
*அன்றாட வாழ்வில் பணம், பொருள், புகழ் என எத்தனையோ இன்பங்களைத் தேடி ஓடுகிறோம். ஓடும் வேகத்தில் நம்மை நாமே விலகிச் சென்று கொண்டிருக்கிறோம்.
*இன்றைய உலகில் மனிதன் செல்வம், சுகபோகத்தைக் கொண்டே மதிப்பிடப்படுகிறான். உண்மை, அன்பு, அறிவு, ஆற்றல், திறமை இவற்றிற்கெல்லாம் மதிப்பற்றுப் போய் விட்டது.
*நம்மைப் பற்றி தெளிவாக அறிந்தால் மட்டுமே வெற்றிகரமான வாழ்வு பெற முடியும். ஆனால், நம்மை நாமே அறிய முயல்வது என்பது அவ்வளவு சுலபமானதல்ல.
*ஆழமாக சிந்திக்கும் போது நம்மைப் பற்றிய வியப்பும், அச்சமும் தரக்கூடிய உண்மையை உணரலாம். அந்த உண்மை என்னவென்றால் நான் ஒருவன் அல்ல என்பதே.
*மனிதவாழ்வு பிரச்னை நிறைந்தது தான். யாராலும் இதைத் தவிர்க்க முடியாது. பரந்த அறிவோடு வாழ்வைப் புரிந்து கொண்டால் பிரச்னையைக் கண்டு பயம் உண்டாவதில்லை.
*வாழ்வில் எத்தனை பிரச்னை குறுக்கிட்டாலும் சமநிலை இழப்பது கூடாது. ஆற்றலின் இருப்பிடமான கடவுளிடம் சரணடைந்தால் உள்ளத்தில் அமைதி குடி கொண்டிருக்கும்.
*பெரும்பாலான பிரச்னைகளுக்கு நாமே காரணமாக இருக்கிறோம். ஆனால், பிறரைக் குறை கூற முயல்கிறோம். இதனால், பிரச்னை தீவிரமாகிறதே ஒழிய தீர்வு உண்டாவதில்லை.
*தற்பெருமை, ஆடம்பரம், படாடோபம் இவையெல்லாம் நம்மை நாம் மறைத்துக் கொள்ள அணியும் முகமூடிகள். சில மனிதர்கள் பணிவு, அடக்கம் போன்ற நற்பண்புகளையும் முகமூடிகளாக அணிந்து கொள்வதுண்டு.
*யாரிடம் ஆணவம் ஆட்டம் போடுகிறதோ, அவரைப் பற்றி ஒன்று மட்டும் நிச்சயமாகச் சொல்ல முடியும். அந்தோ பரிதாபம்! அவர் தன்னைப் பற்றி அறியாமல் இருக்கிறார் என்பது தான் அது.
*தன்னை தானே சுய ஆராய்ச்சி செய்யப் பழகினால் முகமூடிகளை களைந்தெறிந்து விட்டு நமக்கு நாமே உண்மையானவர்களாக வாழ முடியும்.
*கடந்த கால கசப்பான அனுபவங்களை எண்ணி, என் வாழ்வில் இப்படி நடந்து விட்டதே என வருந்தாதீர்கள். நிகழ்கால வாழ்வில் சரியான வழியில் நடக்க உறுதி கொள்ளுங்கள்.
*நம் துன்பத்திற்கெல்லாம் காரணம் நாமே. வேறு யாரும் நம்முடைய இப்போதைய நிலைமைக்குப் பொறுப்பல்ல. நாமே நம் விதியை உருவாக்குகிறோம் என்ற தெளிவு வேண்டும்.
*என் பலம் என்ன? பலவீனம் என்ன? என்ற கேள்வியின் விடையறிந்து நாம் நாமாக இருப்பதும், அதற்கேற்ப வாழ்வை அமைத்துக் கொள்வதும் தான் பணிவின் இலக்கணம்.
*தன்னை உணர்ந்தவர்களே, தன்னால் இயன்ற உதவிகளை பிறருக்குச் செய்வர். நீதிக்கும் நேர்மைக்கும்தலைவணங்கி நடப்பர். அனைவரிடமும்அன்பாகவும் பண்பாகவும் நடந்து கொள்வர்.
*பலம், பலவீனத்தை அறிந்தவரிடம் ஆணவம் தலைதூக்குவதில்லை.அவர் மனதில் பணிவு வேரூன்றத்தொடங்கிவிடும்.
பஜனானந்தர்

No comments:
Post a Comment