கர்மம் என்றால் யக்ஞம் என்று பொருள். யக்ஞங்கள் ஐந்து வகை.
பித்ரு யக்ஞம்- இவ்வுலகத்தில் பிறந்ததற்கான ஊனுடலைத் தந்து உதவிய தாய்- தந்தையரை வணங்குதல்
தேவ யக்ஞம்- இந்த உடலிலே ஆன்மாவைக் குடியிருக்கச் செய்து, அதற்கு உயிர் தந்த கடவுளுக்கு நன்றி சொல்லுதல்.
ரிஷி யக்ஞம்- நல்லறிவைப் பெற்று மனதையும் புத்தியையும் பரிசுத்தமாக வைத்துக் கொள்ள, நூல்களிலிருந்தும் பெரியோர்களிடமிருந்தும் கற்று, கேட்டு அறிந்து கொள்ளுதல்.
நர யக்ஞம்- தன்னைப்போலவே பிற மனிதர்களையும் அன்பு காட்டி நேசித்து ஆவன செய்தல்.
பூத யக்ஞம்- மனிதர்கள் மட்டுமின்றி விலங்கு, பறவைகள் போன்ற ஜீவராசிகளிடத்தும் கடவுள்தான் நிறைந்திருக்கிறார் என்பதை உணர்ந்து அன்பு காட்டுதல்.
இத்தகைய ஐந்து யக்ஞகளை எவனொருவன் தினமும் தவறாது செய்து வருகின்றானோ அவனே கர்மயோகியாவான்.
No comments:
Post a Comment