என்ன விசேஷம் இந்த ஆடி பதினெட்டுக்கு?
18ஐக் கூட்டினால் 9. ஒன்பது என்பது நல்ல எண் என சொல்லுவார் ஒரு எண்ணிக்கை நிபுணர். ஆனால், பதினெட்டின் சிறப்பும், இந்த நாளில் ஆடிப்பெருக்கு கொண்டாடுவதன் காரணமும் தெரியுமா?
பார்வதிதேவி ருதுவான மாதம் ஆடி. ஆடி முதல் தேதியில் வயதுக்கு வந்ததாகச் சொல்வதுண்டு. வயதுக்கு வந்த பெண்களை இக்காலத்தில் தீட்டு என்ற காரணத்துக்காக 16 நாட்கள் வரை வீட்டிலிருந்து விலக்கி வைப்பார்கள். அக்காலத்தில் 18 நாட்கள் விலக்கி வைத்துள்ளனர். அதன்பிறகு 'சடங்கு' என்ற இனிய நிகழ்ச்சியை நடத்துவர். பார்வதிதேவி வயதுக்கு வந்த பதினெட்டாவது நாளே ஆடிப்பெருக்கு ஆகும். இந்நாளில் நீர்நிலை கரைகளில் மக்கள் குடும்பத்துடன் சேர்ந்து 'கூட்டாஞ்சோறு' சமைத்து உண்பர்.
ஆடிப்பெருக்கு விழாவை காவிரி தாய்க்கு மரியாதை செலுத்தும் விதமாக குடும்ப பெண்கள் காவிரிக் கரையில் கொண்டாடுவது வழக்கம். 'ஆடி பெருக்கு' அன்று காவிரியில் குளிப்பது விசேஷமானது என்பதால் காலையில் பெண்கள் காவிரியில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கின்னர். அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர். பூஜையில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, காவிரி உருவாகக் காரணமான விநாயகருக்கு பூஜை செய்கின்றனர். பூஜையில் தேங்காய் பாலை பொங்க பொங்க காய்ச்சி, படைக்கப்பட்ட நைவேத்யம் மற்றும் தேங்காய், வெல்லம், புளி, தயிர் சாதனங்கள் அடங்கிய சித்ரான்னம் படைக்கின்றனர்.
இக்காலத்தில் காவிரி தாய் 'மசக்கையாக' (கர்ப்ப காலம்) இருப்பதாக கருதி படைக்கப்படுகிறது. வீட்டிலுள்ள மூத்த பெண் படையலுக்கும், காவிரித் தாய்க்கும் தீபாராதனை செய்து பூஜையை நிறைவு செய்வார்.....
... சிவனின் மனைவியாக காவிரி போற்றப்படுகிறாள். கைலாயத்தில் சிவன் - பார்வதி திருமணத்தின் போது, வடபுலம் தாழ்ந்தது. இதனால் அகத்திய முனிவரை, 'தென்புலம் சென்று பூமியை சமநிலையாக்குமாறு' சிவபெருமான் பணித்தார். சிவனை திருமணம் செய்வதற்காக, பார்வதிதேவி ஒற்றைக்காலில் தவமிருந்தபோது, கையில் ஒரு மாலையும் வைத்திருந்தாள். அந்த மாலையை ஒரு பெண்ணாக்கி, அகத்திய முனிவரிட்ம வழங்கினாள் பார்வதி. அவரும் அந்தப் பெண்ணை தன் கமண்டலத்தில் அடக்கி தென்னகம் நோக்கி வந்தார். அவரது கமண்டலத்தில் இருந்து வழிந்த தண்ணீரே காவிரியானது. கமண்டலத்தில் மீதமிருந்த தண்ணீரை அகத்தியர் எடுத்துச் சென்று, தான் வாசித்த பொதிகை மலையில் கொண்டுவிட அது தாமிரபரணியானது. இக்காரணத்தால் சிவபெருமானின் மனைவியாக போற்றப்படுகிறாள் காவிரி.
திருச்சி மலைக்கோட்டையின் உச்சியில் மகேந்திர பல்லவன் காலத்து குடவரைக் கோயில் ஒன்றுள்ளது. இங்கு சடைமுடியில் கங்கையைத் தாங்கியபடி அமர்ந்திருக்கும் சிவபெருமானும், பக்கத்திலேயே பார்வதிதேவி நின்ற கோலத்தில் இருப்பதையும் தேவகணங்கள் சுற்றி இருப்பதும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு�� �்ளன.
'ஏற்கனவே சடைமுடியில் இரண்டாவது மனைவியைத் தாங்கிய சிவபெருமான், மலைக்கோட்டையின் பக்திலேயே ஓடும் காவிரியின் மீதும் மோகம் கொண்டுவிடக் கூடாது' என்ற கவலையில் பார்வதி தேவி நின்றபடியே காவல் இருக்கிறாராம்.
சிவபெருமானின் மனைவியாக் கருதப்படும் காவிரியன்னை, விஷ்ணுவுக்கு தங்கையாகிறாள்....
அண்ணனின் சீர்வரிசை: சாதாரண மக்களே காவிரியன்னைக்கு பூஜைகள் செய்யும்போது, அவளது அண்ணனான 'ரங்கநாதர் சும்மாயிருப்பாரா? 'ரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும். ஆடிப்பெருக்கு நாளன்று 'ரங்கம் கோயிலில் இருந்து உற்சவர் 'நம்பெருமாள் புறப்பாடாகி, அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு ஆஸ்தானமிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.
ஆடிப்பெருக்கு நாளில் நாமும் காவிரி அன்னையை வணங்குவோம். வரும் ஆண்டுகளிலாவது முன்பு போல் குதித்தோடி வர வேண்டுவோம்
No comments:
Post a Comment