தமிழ் நாடு பண்டிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மிக சிறப்பாக கொண்டாடும் மனப்பாங்கு கொண்ட மக்கள் வாழும் நாடாக திகழ்ந்துவருகிறத�� �. ஏழை, பணக்காரர் என்று வித்தியாசமின்றி அனைவரும் பண்டிகைகளை அனுஷ்டித்து, பக்தி, சிரத்தையோடு வழிபடுவது மரபாகும்.

8 முழு முதற் கடவுளாம் வினாயகரை முதலில் வழிபட்டு காரியங்களில் இறங்கும் மரபுபடி, வினாயக சதூர்த்தி, பண்டிகைகளை துவக்கி வைக்கிறது சதூர்த்தியை தொடர்ந்து தசரா பண்டிகை எட்டு நாட்கள், வீட்டிலுள்ள பொம்மைகளை கொண்டு கொலுவைத்து, எட்டுநாட்களும் தினுமும் பூஜை செய்து, உற்றார் உறவினருடன் கூடி மகிழ்ந்து, எட்டாம் நாள் சரஸ்வதி பூஜையாக கொண்டாடுகிறார்கள�� �. அதன்பின் வருபது தீபாவளிப் பண்டிகை, நரகாசுரனை வதம்செய்து, தீமைகளை அழித்தநாளாக தீபாவளியை கொண்டாடுகிறார்கள�� �. பட்டாசுகளை கொளுத்தி மகிழ்வது இப்பண்டிகையின் சிறப்பு. சரஸ்வதி பூஜைக்கு மறுநாள் விசயதசமி பண்டிகை, குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதற்கொண்டு, வியாபாரங்களை துவங்குவது, நல்ல காரியங்களை ஆரம்பிப்பது என்று எல்லா நல்ல காரியங்களையும் விஜயதசமி அன்று ஆரம்பிக்கும் பழக்கம் தொன்று தொட்டு வரும் ஒன்று. பல மொழி பேசுபவர்களும், மதத்தை வழிபடுபவர்களும் வாழும் நாடு இந்தியா என்பதால், டிசம்பர் மாதத்தில் வருபது கிறிஸ்துமஸ் பண்டிகை. ஏசு கிறிஸ்து பிறந்தநாளை கிருத்துவர்கள் மிகச்சிறப்பாக கொண்டாடுகிறார்கள�� �.

ஷ்ரீ வைகுண்ட ஏகாதசி அன்று திருமால் கோவில்களில் வைகுண்டத்திற்கான கதவு திறக்கப்படும். வைகுண்ட வாசல் வழியாக பெருமாளை வழிபட்டால், இறந்த பிறகு ஷ்ரீ வைகுண்டத்திற்கு செல்லமுடியும் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் உண்டு.

தமிழ் மாதங்களில் மிகச்சிறப்பான மாதம் தைமாதம். குறிப்பாக விவசாயிகள் வருடம் முழுவதும் பாடுபட்டு வளர்ந்த பயிர்களை அறுபடை செய்து தைமாதம் முதல் நாள், புதுநெல்லைக் கொண்டு புதுப்பானையில் பொங்கலிட்டு மகிழ்வது வழக்கம். தமிழ்நாடெங்கும் வாழும் விவசாயிகள் "பொங்கல் பண்டிகையை" மிகச் சிறப்பாக கொண்டாடுவார்கள். தங்களின் உழவுத்தொழிக்கு பயன்படும் மாடுகளுக்கும், அடுத்தநாள் "மாட்டுப்பொங்கலா க" கொண்டாடுவது வழக்கம். முதல்நாள் பொங்கல், மறுநாள் மாட்டுப்பொங்கல் மூன்றாம் நாள் "கானும் பொங்கல்" என்று மூன்று நாட்கள் இப்பண்டிகையை கொண்டாடுவார்கள். வருடம் முழுவதும் வயலில் உழைத்துவிட்டு, கானும் பொங்கலன்று அனைவரும், சுற்றுலா செல்வது வழக்கம். மாட்டுப் பொங்கலன்று நடத்தப்படும் "மஞ்சுவிரட்டு" என்னும், காளை பந்தயம், உலக புகழ் பெற்றதாகும். இவை தவிர, தைபூசம், மாசிமகம், ஹோலிப்பண்டிகை, தெலுங்குவருடபிறப�� �பு, ஷ்ரீ ராம நவமி, பங்குனி உத்திரம், தமிழ் வருடபிறப்பு, சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆருத்திரா தரிசனம், திருக்கார்த்திகை, திருவண்ணாமலை தீபம், கந்த சஷ்டி, கோகுலாஷ்டமி, வரலக்ஷவிரிதம், காயத்ரி ஜபம், முதற்கொண்டு பல பண்டிகைகளையும் இந்துக்கள், தமிழ்நாட்டில் கொண்டாடும் பண்டிகைகளாகும்.