Tuesday, June 14, 2011

QUESTION -ANSWER SESSION

பவுர்ணமியில் சந்திரனுக்கு பூஜை செய்வது போல் மாதம் மாதம் சூரியனுக்கு வழிபாட்டு நாள் எது?
           மேஷம் முதலான 12 ராசிகளில் சூரியன் சஞ்சரிப்பதையே 12 மாதங்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு ராசியில் சற்றேறக்குறைய 30 நாட்கள் சூரியன் சஞ்சரிக்கிறார். ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு சூரியன் பிரவேசிக்கும் நேரத்தையே மாதப்பிறப்பு என்கிறோம். மாத சங்கராந்தி என்றும் பெயருண்டு. தை மாதப்பிறப்பன்று மகரராசிக்குள் சூரியன் நுழைவதால், மகர சங்கராந்தி என்கிறோம். அதுபோல 12 மாதங்களிலும் மாதப் பிறப்பை சங்கராந்தி என்றே சொல்ல வேண்டும். அன்றைய தினம் சூரிய வழிபாடு செய்வது மிக நல்லது.

* குங்குமத்திற்கு பதிலாக ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்வது சரிதானா?

           நாகரீக மோகத்தில் நிகழும் தவறுகளில் இதுவும் ஒன்று. சுமங்கலிப் பெண்கள் நெற்றியிலும் உச்சியிலும் வைத்துக் கொள்ளும் குங்குமத்தில் தாம் மகிழ்ந்து இருப்பதாக மகாலட்சுமி கூறுகிறாள். எனவே, குங்குமம் தான் உயர்ந்தது. பொட்டு வைத்துக் கொள்வதையே, நாகரீகக் குறைவாக சில சகோதரிகள் கருதும் சூழலில் ஸ்டிக்கராவது வைத்துக் கொள்கிறார்களே என்று அல்ப சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
ஈர ஆடை உடுத்திக் கொண்டு பூஜை செய்வது சரிதானா?
இது கேரள சம்பிரதாயத்தில் உள்ளது. சாஸ்திரப்படி ஸ்நானம் செய்த பிறகு காய்ந்த ஆடை உடுத்தி@ய அனுஷ்டானம் பூஜை இவைகளை செய்ய வேண்டும். பொதுவாக மங்கள நிகழ்ச்சிகளுக்கு ஈர ஆடை உடுத்தக் கூடாது.

* பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது என்பதன் பொருள் என்ன?
ஒரு செயலைத் துவங்கினால் அதை நல்லபடியாக முடிக்க வேண்டும். இதற்கு நல்ல திட்டமும் மனஉறுதியும் தெய்வ பலமும் வேண்டும். திட்டமிடாமல், மன உறுதியும் இல்லாமல் ஒரு செயலைத் துவங்கினால் அதை முடிக்க முடியாமல் திண்டாடுவோம். அப்போது, பலரும் பலவிதமாக ஆலோசனை சொல்லி குழப்புவர். அப்போது, செயலைத் தொடங்கியவருக்கு அங்கும் இங்கும் தாவும் குரங்கு போன்ற மனநிலை ஏற்பட்டு, எடுத்த செயலை முடிக்காமலேயே விட்டு விடுவார்கள். ஒரு காரியத்தைச் செய்யத் துவங்குவது என்பதை பிள்ளையார் பிடிப்பது என்றும், அது சரி வர நடக்காமல் போனால் அங்குமிங்கும் தாவும் குரங்காய் முடிந்தது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

* திருவிளக்கு பூஜையை வீட்டிலேயே நடத்தலாமா?

அவசியம் செய்ய வேண்டும். நீங்களே தனியாகவும் செய்யலாம். பல சுமங்கலிப் பெண்களை
வீட்டிற்கு வரவழைத்தும் செய்யலாம். வீட்டில் திருவிளக்கு பூஜை செய்வது போன்ற மங்களகரமான செயல் வேறு எதுவும் கிடையாது. மகாலட்சுமி உங்கள் வீட்டில் நிரந்தரமாக குடியமர்ந்து விடுவாள்
* ராகு காலத்தில் கட்டாயம் ஒரு வேலை செய்ய வேண்டும் என்றால் அதற்கான பரிகாரம் கூறவும்.
தவிர்க்க முடியாத சூழலில் செய்து தான் ஆக வேண்டும் என்றால் சற்றும் யோசிக்க வேண்டாம். சுவாமி படத்துக்கு முன் தீபம் ஏற்றி வழிபட்டுச் செல்லுங்கள். தெய்வம் துணை நிற்கும்.

* காக்கைக்குப் பழைய சாதத்தை வைப்பதால் கிரக கோளாறுகள் நீங்கும் என்று கேள்விப்பட்டேன் சரியா?

தெய்வ வழிபாடு கிரக றுகளை நீக்கும். சுவாமிக்குப் படைத்த நிவேதன சாதத்தைக் காக்கைக்கு வைக்கலாம். பழையசாதம் போன்றவற்றை வைப்பது முறையல்ல.

No comments:

Post a Comment