கடவுளைப் பற்றி நினைக்கிறீர்கள். உயிரைப் பற்றி நினைக்கிறீர்கள். உண்மையைப் பற்றி நினைக்கிறீர்கள். ஆனால், உங்கள் பார்வை மட்டும் வெளியுலகைப் பற்றியே இருக்கிறது. உலகம் எப்படி இருக்க வேண்டும் என்று பார்ப்பதற்கு முன்பாக, உங்களுக்குள் நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என பார்க்க வேண்டும். உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்காவிட்டால் உலகை அமைதியாக வைத்திருக்க முடியாது.
* வாழ்க்கை தற்செயலாகவோ மற்றொருவருடைய கருணையாலோ நடப்பது நல்லதல்ல. உங்கள் தெளிவினாலும் திறமையாலும் நடக்க வேண்டும். * கடந்த வினாடியை, இந்த வினாடிக்கு சுமந்து கொண்டு வராத மனிதர் தான் அனைத்திலிருந்தும் விடுபட்டு சுதந்திரமானவராக இருக்கிறார்.
* காலையில் கண் விழிப்பதிலிருந்து சிற்றுண்டி சாப்பிடுவது வரை பலர் போராட்டத்தின் உச்சியில் இருக்கின்றனர். வெறுமனே உங்கள் கணவன், மனைவி அல்லது குழந்தைகளைப் பார்க்காதீர்கள். அவர்களுடைய தந்திரங்கள் அனைத்தும் ஏற்கனவே உங்களுக்கு பழக்கமானவை, எதுவும் உங்களுக்குப் புதிதல்ல, அவர்களின் குணம் இன்னதென்று தெரிந்திருந்தும், காலை உணவை முடிப்பதற்குள்ளாக, போராட்டத்தின் உச்சிக்கே போய் விடுகிறீர்கள். நீங்கள் எப்படி இருக்க வேண்டும்
No comments:
Post a Comment