Friday, October 21, 2011

இன்றே நல்ல நாள் தான்


நல்ல விஷயங்களை கொஞ்சம் படித்தாலும் ஆழ்ந்து படிக்க வேண்டும். அதை மனதில் பதித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதை நம் வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போது தான் அதன் பலனை நாம் பெற முடியும்.

* வாழ்வில் செல்வம் சேர்க்கக் கூடாது என்றோ, செல்வத்தை விட்டு விலகவேண்டும் என்றோ ஆன்மிகம் வலியுறுத்தவில்லை. செல்வத்தின் மீது தணியாத ஆசைகொண்டு அலையக்கூடாது என்றே அது சொல்கிறது.


* எப்படி ஆரம்பிப்பது என்றும் கேட்காதீர்கள். எப்போது ஆரம்பிப்பது என்றும் கேட்காதீர்கள். இன்றே நல்லதைத் தொடங்குங்கள். நல்லசெயலைச் செய்வதற்கு இன்றைய தினத்தை விடச் சிறந்த நாள் வேறில்லை. கீதையையும், விஷ்ணு சகஸ்ரநாமத்தையும் இன்றே தொடங்குங்கள்.


* சம்பாதிக்கும் பணத்தை பாதுகாப்பாக சேமியுங்கள். ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்து புண்ணியத்தை தேடுங்கள்.
 பலரும் ஓய்வு பெற்றபிறகு நல்லவற்றைச் செய்யலாம் என்று காத்திருக்கின்றனர். ஆன்மிகம் இப்போதே உங்களுக்கு வழிகாட்ட காத்திருக்கிறது. அதை எளிய முறையில் படிப்படியாக பின்பற்றி முன்னேறுங்கள்.


- சின்மயானந்தர்

No comments:

Post a Comment