Saturday, October 22, 2011

மணமகளே! மருமகளே! வா வா!

உங்கள் வீட்டில் திருமணமா?
                 "ஸப்தபதீ' என்ற மந்திரம் நம் வீட்டு மருமகளை வாழ்த்தி வரவேற்பது பற்றி குறிப்பிடுகிறது. இனி, இவ்வாறு வாழ்த்தி வரவேற்போமே!
1. ஏகமிஷே விஷ்ணுஸ்த்வா- அந்வேதுபொருள்: பெண்ணே! நீ முதலாவது அடியை எடுத்து வைத் தாய். உனக்கு வாழ்க்கையில் அன்னம் குறைவில்லாமல் அளிப்பதற்காக மகாவிஷ்ணு நீ வைத்த அடியில் பின் தொடர்ந்து வருவாராக!
2. த்வே ஊர்ஜே விஷ்ணுஸ் த்வாந்வேது
நீ இரண்டாவது அடி வைத்தாய். அந்த விஷ்ணுவே உனக்கு உடம்பில் புஷ்டி ஏற்படுவதற்கு உன்னைப்பின் தொடர்ந்து வருவாராக.
3. த்ரீணி வ்ரதாய விஷ்ணுஸ் த்வாந்வேது
நீ மூன்றாவது அடியை வைக்கும்போது உனது வாழ்நாளில் விரதங்களை அனுஷ்டிக்கச் செய்வதற்காக மகாவிஷ்ணு உன்னைப் பின்தொடர்ந்து வருவாராக.
4. சத்வாரி மாயோபவாய விஷ்ணுஸ் த்வாந்வேது
நான்காவது அடி வைக்கும்போது உனக்கு நல்ல சுகத்தைக் கொடுப்பதற்காக மகாவிஷ்ணு உன்னைப் பின்தொடர்ந்து வருவாராக.
5. பஞ்ச பசுப்ய: விஷ்ணுஸ் த்வாந்வேது
ஐந்தாவது அடியை நீ வைக்கும்போது உனக்குப் பசுக்கள் முதலான நல்ல நாற்கால் ஜீவன்கள் விருத்தியடைவதற்காக விஷ்ணு உன்னைப்
பின்தொடர்வாராக.
6. ஷட்ருதுப்ய: விஷ்ணுஸ் த்வாந்வேது
ஆறாவது அடியை நீ வைக்கும்போது எல்லாவிதமான ருதுக்களும் (குழந்தை பாக்கியம் முதலானவை) உனக்கு அனுகூலமாகும்படி செய்வதற்காக மகாவிஷ்ணு உன்னைப் பின்தொடர்ந்து வருவாராக.
7. ஸப்த ஸப்தப்யோ ஹோத்ராப்யோ விஷ்ணுஸ் தவாந்வேது நீ வைத்த ஏழாவது அடியில், வாழ்க்கையில் பங்கு கொள்ள வேண்டிய ஹோமங்களைக் குறைவின்றி நிறைவேற்றுவதற்காக மகாவிஷ்ணு உன்னைப் பின் தொடர்ந்து வருவாராக.

No comments:

Post a Comment