சரணாகதி அடைய விரும்புபவர்கள், உடனடி பலன் பெறுவதற்கான சூட்சுமத்தை ராமாயண காவியத்தின் அயோத்தியாகாண்டம் நமக்கு உணர்த்துகிறது. ராமன் காட்டுக்கு கிளம்பிவிட்டார். லட்சுமணன் உடன் வருவதாக தெரிவித்தும் ராமபிரான் சம்மதிக்க வில்லை. ஆனால், லட்சுமி தாயாரின் அம்சமான சீதாதேவி ராமனுடன் வந்தே தீருவேன் என்று அடம் பிடிக்கிறாள். இதுதான் சரியான சமயம் என்று கருதி லட்சுமணன் ராமபிரானிடம் அண்ணா! நானும் காட்டுக்கு உங்களுடன் வருகிறேன் என்று சரணாகதியாக விழுந்து வணங்கினான். தஞ்சம் என வந்தவர்களை லட்சுமி தாயாரின் மனம் எப்போதும் மறுப்பதில்லை. அதனால் தான், பெருமாளை வணங்குவதற்கு முன், தாயாரை வணங்கவேண்டும் என்ற நியதியை, பெருமாள் கோயில் வழிபாட்டில் ஏற்படுத்தி வைத்தார்கள். நாராயணன், நரசிம்மன், ஹயக்ரீவர் ஆகிய திருநாமங்களோடு லட்சுமியையும் இணைத்துச் சொல்லும் மரபும் ஏற்பட்டது.
Without devotion, knowledge is tasteless. Without knowledge, devotion is mere empty idol worship- SWAMI CHINMAYANANDA
Monday, November 21, 2011
மறுக்காத தூய் மனம்
சரணாகதி அடைய விரும்புபவர்கள், உடனடி பலன் பெறுவதற்கான சூட்சுமத்தை ராமாயண காவியத்தின் அயோத்தியாகாண்டம் நமக்கு உணர்த்துகிறது. ராமன் காட்டுக்கு கிளம்பிவிட்டார். லட்சுமணன் உடன் வருவதாக தெரிவித்தும் ராமபிரான் சம்மதிக்க வில்லை. ஆனால், லட்சுமி தாயாரின் அம்சமான சீதாதேவி ராமனுடன் வந்தே தீருவேன் என்று அடம் பிடிக்கிறாள். இதுதான் சரியான சமயம் என்று கருதி லட்சுமணன் ராமபிரானிடம் அண்ணா! நானும் காட்டுக்கு உங்களுடன் வருகிறேன் என்று சரணாகதியாக விழுந்து வணங்கினான். தஞ்சம் என வந்தவர்களை லட்சுமி தாயாரின் மனம் எப்போதும் மறுப்பதில்லை. அதனால் தான், பெருமாளை வணங்குவதற்கு முன், தாயாரை வணங்கவேண்டும் என்ற நியதியை, பெருமாள் கோயில் வழிபாட்டில் ஏற்படுத்தி வைத்தார்கள். நாராயணன், நரசிம்மன், ஹயக்ரீவர் ஆகிய திருநாமங்களோடு லட்சுமியையும் இணைத்துச் சொல்லும் மரபும் ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment