ராமநாமத்தை இடையறாது உச்சரிப்பதால் என்ன நன்மை என்று சிலர் கேட்கிறார்கள். எவன் ஒருவன், இறைவனின் நாமத்தை ஜபித்து, அவனது புகழைப் பாடுகிறானோ, அந்த பக்தனின் உள்ளத்தில், இறைவன் குடியேறிவிடுகிறார். தெய்வத்தின் நாமத்தை உச்சரிப்பது ஓர் இனிய அனுபவம். ஒரு முறை அதை ஜபித்து, அந்தச் சுகத்தை உணர்ந்தவர்கள் அந்த இன்பத்தைத் தொடர்ந்து அனுபவிக்கவே முயற்சிப்பார்கள். அத்தகைய மந்திரசக்தி அதற்கு உண்டு. ராமநாமத்தை ஜபித்துக் கொண்டுதான், ஆஞ்சநேயர் கடலைத் தாண்டி, இலங்கைக்குப் போனார்.
கிருஷ்ண நாமத்தை ஜபித்தபோது, திரவுபதியின் சேலை வளர்ந்து, அவளுடைய மானத்தைக் காப்பாற்றியது. துச்சாதனன் அவளைத் துகிலுரிந்தபோது, பஞ்ச பாண்டவர்களால் அதைப் பார்த்துக் கொண்டுதான் நிற்க முடிந்தது. பீஷ்மராலும் துரோணராலும் அவளுக்கு உதவ முடியவில்லை. கிருஷ்ணநாமம் ஒன்றினால்தான் அந்த அபலையைக் காப்பாற்ற முடிந்தது.

No comments:
Post a Comment