கணவர் பிள்ளைகளை திருத்தும் விரதம்
பொதுவாக பண்டிகைகளின் போது விளக்கேற்றினாலும், அந்தந்த தெய்வங்களை வணங்குவோம். ஆனால், திருக்கார்த்திகையில் விளக்கையே தெய்வமாகப் போற்றுகிறோம். விளக்கு ஒளி இல்லாவிட்டால் வீடு இருண்டு விடும். அதுபோல மனவீட்டில் ஒளி இல்லாவிட்டால் உலகத்தில் அநியாயங்களே மிகுதியாக நடக்கும். குழந்தைகள், கணவர் கெட்ட வழக்கங்களில் ஈடுபட்டிருந்தால், அவர்கள் திருந்தி நற்குணங்கள் பெறுவதற்காக, பெண்கள் கார்த்திகை விரதம் மேற்கொள்ளலாம். திருக்கார்த்திகை தொடங்கி, ஓராண்டுக்கு மாதம்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் விரதம் மேற்கொள்ள வேண்டும்.
பாடினால் பலனுண்டு
நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஆண்டாள்
பாசுரங்களுக்கு தனியிடமுண்டு. பூர நட்சத்திர
நாட்களில் ஆண்டாள் பாசுரங்களைப் பாராயணம் செய்வது சிறப்பு.அதிகாலையில் நீராடிவிட்டு தூய்மையான ஆடையை அணிந்து கொள்ளவேண்டும். பூஜை அறையை மெழுகி கோலமிட்டு ஆண்டாள், ரங்கமன்னார் படத்தை வைத்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும். பசுநெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்ற வேண்டும். ஆண்டாளின்பாசுரங்களான திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகியவற்றைப் படிக்க வேண்டும். இதனால், குடும்பத்திற்கு நன்மைகள் பல உண்டாகும். புத்தி விருத்தியாகும். பாவங்கள் அடியோடு விலகும். யமுனை, கங்கை போன்ற புனிதநதிகளில் நீராடிய புண்ணியம் உண்டாகும். உறுதியான மனம் வாய்க்கும். குடும்ப கஷ்டங்கள் நீங்கும். கெட்டகனவுகள் மறையும். நீண்டகால வியாதிகள் நீங்கும். பகைவர்கள் இருந்த இடம் தெரியாமல் மறைவர். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். அஞ்ஞானம் நீங்கி உண்மை ஞானம் ஏற்படும். பேச்சுத்திறமை ஏற்படும். சங்கீதத்தில் தேர்ச்சி வரும். புகழ் வாழ்வு நிலைக்கும். கன்னிப்பெண்களுக்கு நல்ல கணவன் வாய்ப்பர். தம்பதிகள் நல்ல குழந்தைகளைப் பெறுவர். இறைவனிடம் கேட்டவரம் அனைத்தும் கிடைக்கும். பொதுவாக பாசுரங்களின் இறுதிப்பாடலில் அவற்றைப் படிப்போர் அடையும் நன்மைகள் பற்றிக் குறிப்பிட்டிருக்கும். பலன் கருதாத பக்தி தான் சிறந்தது என்றாலும், நம்மைப் போன்ற சாமான்ய மக்களையும் பக்தியில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திலேயே இந்த பலன்கள் கூறப்பட்டிருக்கின்றன. ஆண்டாள் பாசுரங்களை உள்ளப்பூர்வமான நம்பிக்கையோடு பாராயணம் செய்வோருக்கு வேண்டிய பலன்கள் அனைத்தும் உறுதியாக கிடைக்கும்
கிரகண வேளையில் கோயில் நடை சாத்துகிறார்கள். அந்நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடலாமா?
அந்நேரத்தில் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்றே சாத்திரங்கள் கூறுகிறது. அந்நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி ஜபம் செய்தால் மிக விசேஷம். ஒரு ஜபம் ஆயிரம் மடங்கு ஜபம் செய்வதற்குச் சமம்.
வீட்டில் வழிபாட்டிற்காக இருக்கும் துளசிச் செடியின் இலைகளை மருந்துக்காகப் பறிக்கலாமா?
வீட்டில் துளசிச் செடி வழி பாட்டில் இருப்பதே பெரிய மருந்து தான். இதன் இலைகளைப் பறிக்கக் கூடாது. வேறு துளசிச் செடிகளை வளர்த்து மருந்துக்கு உபயோகிக்கலாம்.
கடவுளின் படம் அல்லது சிலை.. எது வழிபாட்டிற்கு உகந்தது?
மனதில் இறைவனை நிறுத்தி வழிபடுவது மிக உயர்ந்தது. இரண்டாவது சிலை, அடுத்தது படம். முதலில் கூறியதற்கு மன ஒருநிலைப்பாடு அவசியம். உலக வாழ்க்கையை வெறுத்து வேறு எந்த சிந்தனையும் இல்லாத ஞானிகளுக்கு மட்டுமே இது சாத்தியம். உருவச்சிலை வழிபாட்டில் அபிஷேகம், நைவேத்யம் ஆகிய கிரியைகள் அதிகம். அவசரமான காலகதியில் எல்லோருக்கும் இயலாது. பட வழிபாடு எளிமையானது. தினமும் புஷ்பம் சாத்தி, பழம், பால், கற்கண்டு நிவேதனம் செய்தால் போதும். எது உயர்ந்தது என்று கவலைப்படுவதை விட, எது இயன்றது என்று முடிவெடுத்து, அதை விடாமல் செய்வது தான் உயர்ந்தது.
பவுர்ணமியில் சந்திரனுக்கு பூஜை செய்வது போல் மாதம் மாதம் சூரியனுக்கு வழிபாட்டு நாள் எது?
மேஷம் முதலான 12 ராசிகளில் சூரியன் சஞ்சரிப்பதையே 12 மாதங்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு ராசியில் சற்றேறக்குறைய 30 நாட்கள் சூரியன் சஞ்சரிக்கிறார். ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு சூரியன் பிரவேசிக்கும் நேரத்தையே மாதப்பிறப்பு என்கிறோம். மாத சங்கராந்தி என்றும் பெயருண்டு. தை மாதப்பிறப்பன்று மகரராசிக்குள் சூரியன் நுழைவதால், மகர சங்கராந்தி என்கிறோம். அதுபோல 12 மாதங்களிலும் மாதப் பிறப்பை சங்கராந்தி என்றே சொல்ல வேண்டும். அன்றைய தினம் சூரிய வழிபாடு செய்வது மிக நல்லது.
வீட்டில் வில்வமரம் வளர்க்க நினைக்கிறேன். என் எண்ணம் சரியானதா?
சரியானதே. வில்வ மரத்தில் சிவபெருமானும், துளசியில் மகாவிஷ்ணுவும் வசிக்கின்றனர். எனவே, இவற்றை வளர்ப்பதால் நாம் அவர்களின் அருளைப் பெற்று மகிழலாம்.

No comments:
Post a Comment