Tuesday, June 5, 2012

அமைதி தரும் வெள்ளை நிறம்

                                                            

                          
                            சரஸ்வதியிடம் உள்ள ஜப மாலையும், ஏட்டுச்சுவடியும் ஞானத்தைத் தெரிவிக்கிற அடையாளங்கள். பரம ஞானமூர்த்தியான தட்சிணாமூர்த்தி, கையிலும் இவை இருக்கும். ஏட்டுச்சுவடி வித்யையைக் குறிப்பது. வித்யை என்றால் படிப்பு என்று மட்டும் அர்த்தம் பண்ணிக் கொள்ளக் கூடாது. இப்போது இருக்கிற படிப்பு முறையைப் பார்த்தால், வித்யை வேறு, ஞானம் வேறு என்றே தோன்றுகிறது. வித்யை தான் ஞானம் என்கிற பழய முறை போய்விட்டது. பரமேஸ்வரனைப் பாதபூஜை பண்ண வைக்காத ஒரு படிப்பினால் என்ன பயன் என்று கேட்கிறார் திருவள்ளுவர். கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலஅறிவன்  நற்றாள் தொழாஅர் எனின்  அகங்காரம் எல்லாம் அடிபட்டு, பரமாத்மாவுடன் சேருகிற ஞானத்தை தரவே சகல வித்யைகளும் ஆதியில் ஏற்பட்டிருந்தன. மற்ற அகங்காரங்கள் ஒருபக்கம் இருக்க, நாம் வித்வான் என்பதாக படிப்பினாலேயே ஒரு பெரிய அகம்பாவம் வந்துவிடும்.  இதனால் தான், வித்தையோடு விநயத்தையும் சேர்த்துச் சொன்னார்கள். வித்தைக்கு முடிவே இல்லை. கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு என்று சரஸ்வதியே விநயத்தோடு (அடக்கத்தோடு) நினைக்கிறாளாம். சரஸ்வதி வெள்ளை நிறம் கொண்ட ஸ்படிகமாலையைக் கையில் வைத்திருக்கிறாள். இந்த வெள்ளை நிறத்தை நினைத்தாலே மனதில் தூய்மை, அமைதி எல்லாம் உண்டாகின்றன.
-ஆதிசங்கரர்

No comments:

Post a Comment