Monday, June 18, 2012

இன்றே சொல்லுங்க! இப்போதே சொல்லுங்க!

                              
              பாகவதத்தில் அஜாமிளன் என்பவனின்  கதை வருகிறது. ஜாமி என்றால் ஒழுக்கமான பெண். அஜாமி என்றால் ஒழுக்கமற்றவள். ஒழுக்கமற்ற பெண்களை விரும்பியதால் இவனுக்கு இப்பெயர்  ஏற்பட்டது. 88வயது வரை பெண்பித்தனாக வாழ்ந்த அஜாமிளனுக்கு அந்திமகாலம் நெருங்கியது. இவனுடைய பத்து பிள்ளைகளில் கடைசிப் பிள்ளை நாராயணன். தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மகனை நாராயணா என்று கூப்பிட்டபோது உயிர் நீங்கியது. பெரியாழ்வார் பாடியது போல, நாராணன் அன்னை நரகம்புகாள் என்பது அஜாமிளன் வாழ்வில் உண்மையானது. விஷ்ணுதூதர்கள் வந்து அஜாமிளனை வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றனர். ஒழுக்கமில்லாதவன் கூட கடைசி நேரத்தில் பகவந்நாமத்தைச் சொல்லி நற்கதி அடைந்து விட்டான். எனவே, ஒழுக்கத்துடனும், பக்தியுடனும் நாராயணன் பெயரைச் சொன்னால் அவனது அருள் நிச்சயம். அதற்காக அஜாமிளன் போல கடைசி நேரத்தில் சொல்லிக்கொள்ளலாம் என்று இருந்து விடாதீர்கள். நாக்கு உள்ளே இழுத்துவிட்டால் எதுவும் பேசமுடியாமல் போய்விடும்.இன்றே சொல்லுங்க! இப்போதே  சொல்லுங்க! நற்கதிக்கு பாதை ஏற்படுத்துங்க!

No comments:

Post a Comment