Without devotion, knowledge is tasteless. Without knowledge, devotion is mere empty idol worship- SWAMI CHINMAYANANDA
Monday, June 18, 2012
நெய் விளக்கேற்றினால் நினைத்தது நிறைவேறுமா?
இருளை விலக்குவது விளக்கு. அருளை வழங்குவது விளக்கு. ஜோதியை வழிபட்டால் ஒளி மயமான வாழ்க்கை உருவாகும் என்பதால் ஜோதியோடு லெட்சுமியை ஒப்பிட்டு ஜோதிலெட்சுமி என்று சொல்வார்கள். ஆதிலெட்சுமியும், ஜோதிலெட்சுமியும் உங்களுக்கு அருள் கொடுத்தால் பாதியில் நின்ற பணிகள் கூட பரபரப்பாக முடிவடையும். பணத்தேவைகளுள் பூர்த்தியாகும். மின் விளக்கிற்கும் நெய் விளக்கிற்கும் ஒரு மிகப்பெரிய வேறுபாடு உண்டு. ஒரு மின் விளக்கை மற்றொரு மின்விளக்கோடு ஒட்டி வைத்தால் பற்றிக் கொள்ளாது. ஆனால் அதே சமயம் ஒரு எரியும் நெய் விளக்கை மற்றொரு நெய் விளக்கோடு ஒட்டி வைத்தால், அதுவும் பற்றிக் கொண்டு எரியத் தொடங்கும் எனவே நமது பற்றுகளை ஆசைகளை இறைவனிடம் தெரிவிக்கச் செல்லும் பக்தர்கள் நெய் விளக்கேற்றினால் நினைத்தது நிறைவேறும் என்று கூறுகின்றனர் ஞானிகள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment