Saturday, October 13, 2012

நிம்மதி எங்கே இருக்கிறது


* உண்ணும் உணவு உடம்பை வளர்த்துக் கொள்ள மட்டுமல்லாமல் உள்ளத்தையும் சீர்படுத்தும் விதத்தில் அமைய வேண்டும்.
* கடவுள் நமக்கு உள்ளம், உடல் இரண்டையும் கொடுத்ததோடு அதைச் சரியான வழியில் நடத்த புத்தியையும் கொடுத்திருக்கிறார்.
* எப்போதும் ஏதாவது ஒரு நல்ல செயலில் மனம் ஒன்றி ஈடுபடவேண்டும். அப்போது தான், அது அழுக்குப்படியாத கண்ணாடி போல தூய்மையுடன் இருக்கும்.
* பெரியவர்கள் வகுத்து வைத்திருக்கும் நியாய தர்மங்களைப் பின்பற்றவேண்டும். முறை தவறிச்செய்யும் செயல்களால் கஷ்டம் தான் உண்டாகும்.
* செய்யும் தொழிலைக் கடனே என்று செய்வதால் ஒரு பயனுமில்லை. ஆர்வத்தோடும், மனப்பூர்வமாகவும் செய்வது அவசியம்.
* மற்றவர்களோடு நம் வாழ்வை ஒப்பிட்டுப் பார்த்தால் போட்டி பொறாமை தான் உருவாகும். மனநிம்மதி உங்களுக்குள் தான் இருக்கிறது.
- காஞ்சிப்பெரியவர்

No comments:

Post a Comment