Saturday, October 13, 2012

நிலையான இன்பம் எது?



எந்தச் செயலையும் அதற்குரிய தர்மத்துடன் முறையாகச் செய்ய வேண்டும். முறை பிறழும் போது, அதற்கான பின்விளைவை ஏற்றுத் தான் ஆகவேண்டும்.

* நமக்கு நியாயமாகத் தோன்றுவது இன்னொருவருக்கு அநியாயமாகத் தெரியலாம். அதனால், எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் பொதுவான நியாயத்தைச் செய்வது தான் நல்லது.

* நிலையான இன்பம் என்பது கடவுளிடம் கொள்ளும் பக்தி மட்டுமே. ஆசாபாசங்களில் நாட்டம் உள்ள வரை அனைவருக்கும் கஷ்டங்கள் உண்டாகத்தான் செய்யும்.

* ஒருவனுக்கு பணமும், பதவியும் இருக்கும்போது உண்டாகும் சுகத்தைவிட, அதைப் பாதுகாக்கவேண்டும், பதவி போய்விடக்கூடாது என்ற எண்ணம் தான் அதிகமாக இருக்கிறது.

* உலகில் இருப்பவர்கள் எல்லாருமே, தாங்களே மகாபுத்திசாலி, ஒழுக்கமுள்ளவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல தன்னைப் போல கஷ்டப்படுபவர்களும் வேறு யாருமில்லை என்றும் எண்ணிக் கொள்கிறார்கள்.
* நம் கோபம் எதிராளியை மாற்றாது. மாறாக நம் மீது மேலும் எதிர்ப்பை வளர்க்க செய்யும். அதனால், கோபம் இரு தரப்பிலும் வெறுப்பினை அதிகரிக்கவே செய்கிறது.
-காஞ்சிப்பெரியவர்

No comments:

Post a Comment